சியோமி நிறுவனம் இன்றுடன் தனது 3000 Mi ஸ்டோரை இந்தியாவில் திறந்து வைத்ததாக இன்று வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சேனல் பிளே நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய பிரத்தியேக பிராண்ட் சில்லறை நெட்வொர்க்காக சியோமி உருவெடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
சியோமி Mi ஸ்டோர்
சியோமி நிறுவனம், இந்தியாவில் இன்று அதன் 3000 வது மி ஸ்டோரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய நாட்டில் குறுகிய காலத்தில் அதிக ஸ்டோரை நிறுவிய வெற்றி நிறுவனம் என்ற பெயரை சியோமி எடுத்துள்ளது. இத்துடன் சியோமி நிறுவனம் தனது நிறுவனத்தின் கால்தடத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
3000-வது புதிய கடை
சியோமி நிறுவனம் தற்பொழுது புதிதாகத் திறந்துள்ள 3000-வது புதிய கடை உத்தரப்பிரதேச புலந்த்ஷாரில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன், இப்போது நாட்டின் 850 நகரங்களில் மி ஸ்டோர்ஸ் உள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி தனது முதல் மி ஸ்டோரை ஆகஸ்ட் 15ம் தேதி, 2018 அன்று பெங்களூரில் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி
சியோமி நிறுவனம் வெறும் 2 ஆண்டுகளில், இப்படி ஒரு சாதனையைப் படைத்துள்ளது. இரண்டே வருடங்களில் இந்தியா முழுவதும் சுமார் 3000 Mi ஸ்டோர்களை நிறுவியுள்ளது. இந்த மைல்கல்லை சியோமி நிறுவனம் பெருமையுடன் தனது வாடிக்கையாளர்களின் வரவேற்புடன் எட்டியுள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வேலைவாய்ப்பு
Mi ஸ்டோர் விற்பனை நிலையத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுமார் 6000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்தது என்றும் சியோமி பிராண்ட் கூறியுள்ளது. சியோமி மி இந்தியா, தற்போது 75+ மி ஹோம்ஸ், 45+ மி ஸ்டுடியோஸ், 8000+ மி விருப்பமான கூட்டாளர்கள் மற்றும் 4000+ பெரிய வணிக சில்லறை கூட்டாளர்களுடன் 3000 மி ஸ்டோர்களைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக