கொரோனாப் பெருந்தொற்றிலிருந்து மாநிலம் மீண்டு இயல்பு நிலை அடைந்துவிட்டதைக் குறிக்கும் குறியீடாகவே பொது போக்குவரத்து தொடங்குவதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் தொடருமா என்பதுதான் இந்த நாளில் நம் எல்லோர் முன்பும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள்ளான பொதுப்போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கும் அனறாடம் பணிக்குச் செல்ல பேருந்தை மட்டுமே நம்பியிருந்தவர்களுக்கும் இது பெரும் நிம்மதியை அளித்திருக்கிறது.
சொல்லப்ப்போனால், பேருந்தில் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்களுக்கும் கூட இந்த முடிவு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
காரணம், கொரோனாப் பெருந்தொற்றிலிருந்து மாநிலம் மீண்டு இயல்பு நிலை அடைந்துவிட்டதைக் குறிக்கும் குறியீடாகவே பொது போக்குவரத்து தொடங்குவதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஆனால், அந்த நிம்மதியும், மகிழ்ச்சியும் தொடருமா என்பதுதான் இந்த நாளில் நம் எல்லோர் முன்பும் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.
பொதுபோக்குவரத்து நிறுத்தம்
எங்கோ இருக்கிறது கொரோனா. இங்கெல்லாம் வராது என்ற அசமந்தத்தின் விளைவாக ஆபத்துக்குள சிக்கின ஏனைய உலக நாடுகள். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் இந்தியாவுக்குள் நுழைந்த கொரோனாவின் வீரியத்தை தவிர்க்கும் பொருட்டு மனிதர்கள் இடம்பெயருவதை தடுக்க அரசு முடிவெடுத்தது. அதன்விளைவாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. அன்று முதல் பேருந்து, ரயில்கள், விமானம் ஆகிய பொதுப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஏற்கனவே இப்படித்தான்:
மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு பொதுப்போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், இடையில் மீண்டும் அரசுப்பேருந்துகள் குறைவான பயணிகளுடன் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து மண்டலங்களுக்குள்ளாக போக்குவரத்து சேவை தொடங்கியது. ஆனால், நடத்துநருக்கு கொரோனா, ஓட்டுநருக்கு கொரோனா, பயணிக்கு கொரோனா மாறி மாறி வந்த செய்திகள் கொரோனாவை விட வேகமாகப் பரவியதையடுத்து மீண்டும் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் தொடக்கம்:
இந்நிலையில், இன்று முதல் (01.09.2020) மீண்டும் தொடங்கியுள்ளது தமிழகம் முழுக்க பொதுப்போக்குவரத்து. ஆனால், இந்த முறை மண்டலங்களுக்குள்ளாக அல்ல. மாவட்டங்களுக்குள்ளாக மட்டுமே அனுமதி. ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்ல பேருந்து வசதிகள் கிடையாது.
ஆனால், இப்போதும் ஒரு சிக்கல் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. முன்பு அனுமதி அளிக்கப்பட்டபோது தொழில் நிறுவனங்களும், அலுவலகங்களிம் இயங்க அனுமதி முழுமையாக வழங்கப்படவில்லை. ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல. 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மாநகரப் பேருந்துகள்
அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வாதாரமே, வெளியில் வேலைக்குச் சென்றால்தான் உண்டு என்ற நிலைமையில் இருக்கும் தமிழகம் இன்றுதான் மகிழ்ச்சியடைந்துள்ளது. காரணம், அப்படியான மக்களுக்கு மாநகரப் பேருந்துகள்தான் போக்குவரத்துக்கான ஒரே வழி. அதேசமயம் அனைத்து அலுவலகங்களும் இயங்கத் தொடங்கிவிட்டன. எனவே அனைத்து தரப்பினரும் இனி பயணிக்கத் தொடங்குவர். அங்குதான் இருக்கிறது சிக்கலே.
மாநகரப் பேருந்துகளில் சானிட்டைசர் பயன்பாடு, தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. எனினும் தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மீண்டும் நிறுத்தப்படுமா?
ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமான கொரோனா தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இந்த வரிசையில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு.
மக்களின் தேவையை தவிர்க்க முடியாததால் இந்த பொதுப்போக்குவரத்துக்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இயல்புநிலை திரும்பிவிட்டதாக தோன்றினால் அது ஒரு தோற்ற மயக்கமே. உண்மையல்ல.
இப்படி இருக்கையில், மீண்டும் கொரோனாத் தொற்று படவுவதற்கு பொதுப்போக்குவரத்து காரணமாக இருக்கிறது என்பது கண்டறியப்ப்பட்டால், மீண்டும் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட வலிமையான வாய்ப்புகள் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக