Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 செப்டம்பர், 2020

கூகுளின் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகமா?- இதோ முழு விவரங்கள்!



கூகுளின் கூகுள் பிக்சல் 5 மற்றும் கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
கூகுளின் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ
கூகுளின் பிக்சல் 5 மற்றும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கூகுள் பிக்சல் 4ஏ 5ஜி மற்றும் கூகுள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 25 ஆம் அறிமுகம் செய்ய உள்ளதாக வோடபோன் ஜெர்மனி கிளை தரப்பில் வெளியான தகவல் கூறுகிறது.
செப்டம்பர் 25 ஆம் தேதி பிக்சல் 5 ஸ்மார்ட்போன்

இதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் உண்மையானால், கூகுள் பிக்சல் 4ஏ 5ஜி மற்றும் கூகுகள் பிக்சல் 5 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 25 ஆம் தேதி ஜெர்மனியில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிக்சல் 5, பிக்சல் 4ஏ 5ஜி வெளியீட்டு நிகழ்வு விரைவில் நடைபெறும் என ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் பச்சை நிறத்தில்

இதுகுறித்து வெளியான சில நம்பக தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கலாம். பிக்சல் 5ஜி ஸ்மார்ட்போனானது கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகும் எனவும் எஸ்டி765ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனமானது எஸ்டி765ஜி இருப்பதால் 5ஜி அம்ச ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6.67 இன்ச் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ஓஎல்இடி பேனல் மற்றும் 8 ஜிபி ரேமோடு வெளியாகும் என கூறப்படுகிறது. பிக்சல் 4ஏ மாடலில் நவீன பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு இருக்கும் எனவும் கூகுள் பிக்சல் 4ஏ 5.81 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 730 இயக்கம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக