ஏர்டெல் தங்களது
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் நுழைவு நிலை
வாடிக்கையாளர்களுக்கு ஏணைய சலுகைகளோடு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி சேவைகளை
வழங்குவதாக அறிவித்துள்ளது.
பல்வேறு சலுகைகள்
அறிவிப்பு
இந்திய தொலைத்தொடர்பு
நிறுவனங்களை பொறுத்தவரை தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் பல்வேறு
சலுகைகளை அறிவித்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் ஜியோ வருகைக்கு பிறகு பிற
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதில் சிக்கலை சந்தித்து
வருகின்றனர்.
மலிவு விலையில் டேட்டாக்கள்
ஜியோ மலிவு விலையில்
டேட்டாக்களை அறிவித்து வருகிறது. இதனால் ஜியோ குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி
அடைந்தது. இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ஜியோவுக்கு இணையான
விலையில் சலுகைகளை அறிவிக்கமுடியவில்லை என்பதே உண்மை.
புதிய நுழைவுநிலை
வாடிக்கையாளர்கள்
இருப்பினும் தங்களது
வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும்
ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் சலுகைகளை தொடர்ந்து அறிவித்து
வருகின்றன. இதில் ஏர்டெல் புதிய நுழைவு நிலை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு
சலுகைகளை அறிவித்து வருகிறது.
டிஸ்னி ப்ளஸ்
ஹாட்ஸ்டார் இலவச சந்தா
ஏர்டெல் தங்களது புதிய
வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இலவச சந்தாவை அறிவித்துள்ளது. இந்த
சலுகை ரூ.499 விலைக்கு பொருந்தும் என டெலிகாம் டாக் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தினசரி 3ஜிபி டேட்டா
ரூ.499 திட்டத்தில்
ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டாவை
வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்புகள், 100 எஸ்எம்எஸ்கள்
ஆகியவை வழங்குகிறது. மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலையும் இந்த திட்டத்தில்
வழங்குகிறது.
விஐபி வருடாந்திர சந்தா
அதேபோல் ரூ.401
திட்டத்தில் விஐபி வருடாந்திர சந்தாவான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் பயன்பாடு மற்றும்
30 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியில் வழங்குகிறது. இதேபோல் ரூ.448,
ரூ.599, ரூ.2698 ஆகிய திட்டங்களில் நன்மைகளை வழங்குகிறது. விலைக்கேற்ப டேட்டா
மாறுபாடுகளும், வேலிடிட்டி மாறுபாடுகளும் வழங்குகிறது.
நுழைவு நிலை
பயனர்களுக்கான திட்டங்கள்
அதேபோல் நுழைவு நிலை
அதாவது முதல்முறை பயனர்களுக்கு ஏர்டெல் சில திட்டங்களை தொகுத்து வழங்குகிறது,
ரூ.197, ரூ.297, ரூ.497, மற்றும் ரூ.647 பல்வேறு சலுகைகளை வழங்கினாலும் ஓடிடி
அணுகலுக்கான சலுகையை வழங்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக