BSNL நாட்டில் 4G சேவைகளை வழங்க போராடி வருகின்ற போதிலும், அது தனது VoLTE சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது..!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது இந்நிறுவனம். இந்நிலையில், BSNL இந்தியாவில் 4G சேவைகளை வழங்க போராடி வருகின்ற போதிலும், அது தனது VoLTE சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL நிறுவனம் ஒடிசாவில் வாய்ஸ் ஓவர் லாங் டர்ம் எவல்யூஷன் சர்வீசஸ் (VoLTE) சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் செய்திகளை அனுப்பி புதிய சேவையைப் பற்றி தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இதன் பொருள் விரைவான அழைப்பு இணைப்புடன் HD தரத்துடன் வீடியோ அழைப்புகளை வாடிக்கையாளர்கள் செய்ய முடியும்.
வாடிக்கையாளர்கள் VoLTE சேவைகளைப் பெறவில்லை என்றால், அவர்கள் தங்கள் அமைப்பைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு வருடத்தில் இது இரண்டாவது முறையாக நிறுவனம் தனது VoLTE சேவைகளை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக இது கோயம்புத்தூர், கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள தென் மண்டலத்தில் தொடங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக