Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

64MP குவாட் கேம் + 5000mAh பேட்டரியுடன் Moto G9 Plus அறிமுகம்!

மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் ஆக மோட்டோ ஜி 9 பிளஸ் மாடல் அறிமுகமாகி உள்ளது. என்ன விலை, என்னென்ன அம்சங்கள், இதோ முழு விவரங்கள்.

மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக அதன் ஐரோப்பிய சந்தையில் மோட்டோ ஜி 9 பிளஸ் மாடல் அறிமுகம் ஆகியுள்ளது. புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 4 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் கீழ் மட்டுமே அறிமுகமாகி உள்ளது.

விலையை பொறுத்தவரை, இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.26,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் மற்றும் விற்பனை குறித்து எந்த தகவலும் இல்லை.


அம்சங்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் 6.00 இன்ச் அளவிலான புல் எச்டி + டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 20: 9 என்கிற உயரமான திரை விகிதத்துடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 ஜி ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. உடன் மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி விரிவாக்கக்கூடிய 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 4 ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஒரு செவ்வக குவாட்-கேமரா அமைப்பு உள்ளது. அதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா (எஃப் / 1.7) + 8-மெகாபிக்சல் சென்சார் வைட்-ஆங்கிள் கேமரா (எஃப் / 2.2) மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல்கேமராக்களை கொண்டுள்ளது, அதில் ஒன்று டெப்த் சென்சார் மற்றொன்று மேக்ரோ சென்சார் ஆகும்.

முன்பக்கத்தை பொறுத்தவரை, மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது மற்றும் அது டிஸ்பிளேவின் மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் ஹோல் வடிவமைப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, மேலும் இது 5,000 எம்ஏஎச் பேட்டரியை 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.


இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூடூத் 5.0, வைஃபை, வோல்டிஇ, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் டூயல் சிம் ஆதரவு (நானோ சிம்) போன்றவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 169.98 x 78.1 x 9.69 மிமீ மற்றும் 223 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக