எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை!
ஏடிம்களில் பணத்தை எடுப்பதைப்
பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது ஏடிஎம் கார்டு பரிவர்த்தனையில்
புதிய பாதுகாப்பு அம்சத்தைச் சேர்த்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், உங்கள் எஸ்பிஐ
ஏடிஎம் கார்டில் எஸ்எம்எஸ் வழியாகப் பரிவர்த்தனை மோசடிகளை நீங்கள் தடுக்கலாம். ஏடிஎம்
கார்டு தொலைந்து போயிருந்தாலும் அல்லது உங்களுக்குத் தெரியாமல் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ
மோசடி அல்லது சட்டவிரோத பரிவர்த்தனைகள் ஏற்படாமல் நீங்கள் தடுக்கலாம். அது குறித்து
விரிவாகப் பார்க்கலாம்...
அதிகரிக்கும்
ஏடிஎம் மோசடிகள்!
இந்தியாவில் நாளுக்கு
நாள் ஏடிஎம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும்
இந்த மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உங்களது ஏடிஎம் கார்டில் உங்களுக்குத்
தெரியமலேயே பணத்தை எடுத்து மோசடி செய்வது நடைபெறலாம். எனவே அதிகரித்து வரும் ஏடிஎம்
மோசடிகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வசதியை எஸ்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
வங்கியிடமிருந்து வரும் எஸ்எம்எஸ் செய்திகளைத் தனது வாடிக்கையாளர்கள் கவனமுடன் பார்த்து
எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. இருப்பு விசாரணை அல்லது மினி ஸ்டேட்மென்ட்
தொடர்பான எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
எப்படிச் செயல்படுகிறது?
வாடிக்கையாளர்கள் தங்களது
வங்கிக் கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் அல்லது காசோலை புத்தகங்களுக்கான கோரிக்கையை
அனுப்ப எஸ்எம்எஸ் மூலம் சேவையைப் பெறலாம். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள்
Balance Enquiry அல்லது Mini Statement எடுப்பதற்கான கோரிக்கையை ஏடிஎம்கள் வழியாகப்
பெறும்போது, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். இதன் மூலம் அவர்கள்
எச்சரிக்கையாக இருக்கலாம். அந்தப் பரிவர்த்தனை உங்களால் மேற்கொள்ளப்படாவிட்டால் உடனடியாக
அவர்களின் ஏடிஎம் கார்டை நீங்களே பிளாக் செய்து விடலாம். வாடிக்கையாளர் சேவை அழைப்பு,
நெட் பேங்கிங் மற்றும் எஸ்பிஐ குயிக் ஆப் ஆகியவற்றின் மூலமாகவும் உங்களது ஏடிஎம் கார்டை
நீங்கள் பிளாக் செய்யலாம்.
இதை
எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த சேவையைப் பயன்படுத்த,
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட தங்களது மொபைல் எண்ணிலிருந்து
எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். நீங்கள் வங்கியில் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால்,
முதலில் 09223488888 என்ற எண்ணுக்கு REG space உங்கள் வங்கிக் கணக்கு எண்ணுடன் எஸ்எம்எஸ்
அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இச்சேவையை நீங்கள் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக