Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 2 செப்டம்பர், 2020

கொரோனா சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் கட்டணம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுரையை சேர்ந்த நேரு என்பவர் கடந்த ஜூன் மாதம் தனக்கும் தனது மனைவிக்கும் காய்ச்சல், சளி இருந்ததால், சிகிச்சை பெறுவதற்காக மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனிக்கு சென்றுள்ளார். அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், உடனடியாக மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, மருத்துவமனையில் சேர்ந்த நேருவிடம் அவருக்கும் அவரது மனைவிக்கும் சேர்த்து தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் சிகிச்சை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, நேருவும் ரூ.8 லட்சத்தை கட்டியுள்ளார். ஆனால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ஸ்வாப் டெஸ்ட்டில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த நேரு மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னையும் தனது மனைவியையும் உடனடியாக டிஸ்ஜார்ஜ் செய்ய வேண்டும் என்றும், தாங்கள் செலுத்திய ரூ.8 லட்சம் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ரூ.1 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு எஞ்சிய பணத்தை கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக நேரு மனு அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. அதனைத்தொடர்ந்து, தாங்கள் செலுத்திய பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கானது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, இல்லாத கொரோனாவுக்கு 8 லட்சம் ரூபாய் வசூல் செய்தது எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசும், மருத்துவமனை நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக