இந்தியாவில் கார் என்பது ஆடம்பரம் என்ற கட்டத்திலிருந்து அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு இன்றைய குடும்பக் கட்டமைப்பிற்குக் கார்களின் தேவை அதிகமாகியுள்ளது. அந்த வகையில் இந்திய மக்கள் மத்தியில் எப்போதும் விரும்பத்தக்க நிறுவனமாக இருக்கும் மாருதி சுகுசி நிறுவனத்தின் Eeco வேன் அறிமுகம் செய்யப்பட்டு 10 வருடம் நிறைவடைந்துள்ளது.
இந்தியாவில் மாருதி சுசூகி-யின் ஆம்னி கார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, ஆனால் பல்வேறு காரணங்களுக்காக ஆம்னி கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டு Eeco கார் உருவாக்கியது.
இந்திய ஆட்டோமொபைல் வர்த்தகத்தின் வேன் பிரிவில் மாருதி சுசூகி-யின் ஆதிக்கம் மிகப்பெரியது.
90% வர்த்தகம்
மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆம்னி தயாரிப்பு நிறுத்திய பின்பு Eeco கார் அறிமுகம் செய்யப்பட்டுச் சுமார் 10 வருடமும் முழுமையாக முடிந்த நிலையில் கடந்த 10 வருடத்தில் சுமார் 7 லட்சம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது மாருதி சுசூகி.
இதுமட்டும் அல்லாமல் வேன் பிரிவு வர்த்தகத்தில் மாருதி சுசூகி சுமார் 90 சதவீத வர்த்தகத்தைக் கைப்பற்றி நீண்ட காலமாகப் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
மாருதி Eeco
இந்த மாருதி Eeco கார் பயணிகள் காராக மட்டும் அல்லாமல் வர்த்தகத்திற்குப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கார் இரு தரப்பு பயன்பாடுக்கும் பயன்படும் வகையில் இருப்பதால் பட்ஜெட் குடும்பங்களும், வியாபாரிகளும் அதிகம் விரும்பி இந்தக் காரை வாங்கினர்.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 50 சதவீதம் மாருதி Eeco கார் இரண்டு சேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேம்பாடு
கடந்த 10 ஆண்டுகளில் மாருதி ஈகோ கார் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது, இன்றைய நவீன கார்களில் இருக்கும் பல சேவைகள் இந்தக் காரில் அறிமுகம் செய்யப்பட்டுக் கூடுதலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இந்தக் கார் அதிக மைலேஜ் கொடுப்பதாலும் மக்கள் மத்தியில் இந்த மாருதி ஈகோ வேன்-க்கு பெரிய வரவேற்பு தற்போது உள்ளது.
விற்பனை
மாருதி ஈகோ கார் தற்போது 5 சீட், 7 சீட், கார்கோ, ஆம்புலென்ஸ் என இந்தியாவில் மட்டும் சுமார் 12 வகைகளில் தயாரிக்கப்பட்டு வர்த்தகச் சந்தைக்கு வருகிறது. இதனால் பல தரப்பு மக்களின் தேவைகளை இந்த மாருதி கார் பூர்த்திச் செய்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் Eeco போன்ற கார்களுக்கு மவுசு உள்ளதா..? என்று கேட்பவர்களுக்குப் பதில்.
உள்ளது, ஆம் 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் மாருதி ஈகோ-வும் ஓன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக