Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 7 செப்டம்பர், 2020

கிழக்குடெல்லி-சங்கட ஹர கணபதி



மூலவர் : சங்கடஹர கணபதி

பழமை : 500 வருடங்களுக்குள்

ஊர் : கிழக்குடெல்லி

மாநிலம் : டெல்லி

திருவிழா

ஸ்ரீதியாகராஜ ஆராதனை, ஸ்ரீராமநவமி, நவராத்திரி கொலுவைபவம், பொங்கல்விழா, ஆவணிஅவிட்டம் போன்ற தென்னிந்திய விழாக்களும், திருவிளக்குபூஜை, தனுர்மாச பூஜைகளும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொருமாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில், நவகிரஹஹோமம், கணபதிஹோமம் போன்ற சத்காரியங்களும், லோகஷேமத்திற்காக செய்யப்படுகின்றன.

தல சிறப்பு

32 வடிவங்களில் ஒன்றான சங்கடஹர கணபதி வடிவமாகும் இங்குள்ள கணபதி சிலை. இது ஒரேகல்லில் செதுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி

அருள்மிகு சங்கடஹர கணபதி திருக்கோயில், மஹாராஜா அகர்சன்டெல்லியூனிவர்சிட்டி காலேஜ் அருகில், சிட்டிஅபார்ட்மெண்ட்ஸ் எதிரில், துவாரகா - நொய்டா ப்ளூ லைனில் நியூ அசோக் நகர்ஸ்டேஷன். வசுந்தரா என்க்ளேவ், கிழக்குடெல்லி - 110096.

போன்: 

+91 98111 61370, 98716 92175, 98101 34615, 011 22627778

பொது தகவல்

இந்த கோயிலில், ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீசாஸ்தா, ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீவைத்தியநாதஸ்வாமி, ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி, ஸ்ரீஆஞ்சநேயர், நவக்கிரகங்கள், கோஷ்டதேவதைகள், ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீமஹாவிஷ்ணு, ஸ்ரீப்ரம்மா மற்றும் ஸ்ரீதுர்காதேவி முதலிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த கோயிலில் தரைதளத்திலும், இரண்டாம்தளத்திலும், சுமார் 250 பேர்அமரக்கூடிய அளவிலான கூடங்கள் உள்ளன. இவற்றில்இந்துமத விழாக்கள், கலை மற்றும் கலாச்சார விழாக்கள் மற்றும் சிறியஅளவிலான பொதுவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
பிரார்த்தனை
எடுத்த காரியங்களில் தடங்கல் இன்றி வெற்றிபெற இங்குள்ள கணபதியை வேண்டுகிறார்கள்.

நேர்த்திக்கடன்

விநாயகருக்கு அபிஷேகமும் புது வஸ்திரமும் சாற்றப்படுகிறது.
தலபெருமை:
அகில இந்தியாவிலும், இங்கு மட்டுமே சங்கீதமும் மூர்த்திகளான ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீ முத்துஸ்வாமிதீக்ஷிதர், ஸ்ரீஷ்யாமாசாஸ்திரிஆகியோருக்கு பெரிய அளவு சிற்பங்கள் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பாகும்.

தல வரலாறு

சங்கடமெல்லாம் தீர்க்கும் ஸ்ரீசங்கடஹர கணபதி ஆலயம், கிழக்குடெல்லியில்உள்ள வசுந்தரா என்க்ளேவ் பகுதியில்அமைந்துள்ளது. இந்த கோயில் நிர்மாணத்திற்கான நிலம் டெல்லி வளர்ச்சிக் குழுமத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கோயிலின் மஹாகும்பாபிஷேகம் 2010ம் ஆண்டு ஆகஸ்ட், 29ம்தேதி நடைபெற்றது. ஆன்மீகச் செம்மல்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். காஞ்சி பீடாதிபதி ஜகதகுரு ஸ்ரீஸ்ரீ ஜெயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ தயானந்தசரஸ்வதிஸ்வாமிகள், ஷகடபுர ஜகத்குருஸ்ரீவித்யாபினவ ஸ்ரீஸ்ரீக்ரிஷ்ணானந்த தீர்த்தமஹா ஸ்வாமிகள், ஸ்ரீ காமாக்ஷி ஸ்வாமிகள், ஸ்ரீமதி ஒளிசரஸ்வதி மற்றும் பல புனிதர்கள் இந்த கோயிலிற்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்: 32 வடிவங்களில் ஒன்றான சங்கடஹர கணபதி வடிவமாகும் இங்குள்ள கணபதி சிலை. இது ஒரேகல்லில் செதுக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

இருப்பிடம்

கிழக்கு டில்லி, வசுந்தரா என்க்ளேவ், நியூ அசோக் நகர்ஸ்டேஷன். அருகாமையிலுள்ள மெட்ரோ ரயில்நிலையம் துவாரகா - நொய்டா ப்ளூ லைனில், சிட்டிஅபார்ட்மெண்ட்ஸ் எதிரில், மஹாராஜா அகர்சன்டெல்லியூனிவர்சிட்டி காலேஜ் அருகில், சங்கடஹர கணபதி திருக்கோயில் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக