திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தங்களின் கோரிக்கைகளை ஏற்றால்
மட்டுமே புதிய படங்கள் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் கடிதம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 6000- க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில்
உள்ளது.
ஆயினும், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் சுற்றுலா தளங்கள்
ஆகியவை மூடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால், பல
படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், திரையரங்குகள்
திறக்கப்பட்டாலும், தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் அனைத்தும்
வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், QUBE, UFO கட்டணங்களை இனி செலுத்தமுடியாது திரையரங்க
உரிமையாளர் சங்கத்திற்கு 51 தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். திரையரங்கில்
காட்டப்படும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க
வேண்டும் எனவும், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் கிடைக்கும் தொகையில்
தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக