அண்ணா பல்கலைகழக பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு
அரியர் தேர்வுகளில் தேர்ச்சி அளிப்பது குறித்து ஏஐசிடிஐ அனுப்பிய எச்சரிக்கை
கடிதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பொறியியல் படிப்பு மாணவர்களுக்கு அரியர் பாடங்களில் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஏஐசிடிஐ கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவ்வாறாக எந்த கடிதமும் தமிழக அரசுக்கு வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்திற்கு ஏஐசிடிஐ அனுப்பிய கடிதம் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு அரியர் பாடங்களில் தேர்ச்சி அளிப்பதை ஏற்க முடியாது. தேர்வின்றி மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது அவர்களின் உயர்கல்வியையும், வேலை வாய்ப்பையும் பாதிக்கும். எனவே உத்தரவை மீறி அண்ணா பல்கலைகழகம் செயல்பட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த கடிதம் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக