Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

தனுசு ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

தனுசு ராசியின் அதிபதி குரு ஆவார். சூரியன் குரு தேவருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். சூரியன் இங்கு நட்பு என்ற முறையில் நிற்பதால் ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

செல்வம் மற்றும் செல்வாக்கு உடையவர்கள்.

அரசியல் தொடர்பு மற்றும் கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

தானம், தர்மம் வழங்கக்கூடியவர்கள்.

தந்தையின் மீது மிகுந்த அன்பும் குடும்பத்தின் மீது மரியாதையும் கொண்டவர்கள்.

உறவினர்களை அனுசரித்து செல்லக்கூடியவர்கள். தனக்கு சமமான அதிக நண்பர்களை கொண்டவர்கள்.

பூர்வீக சொத்தும், சம்பாதிக்கும் வல்லமையும் கொண்டவர்கள்.

பூஜை புனஸ்காரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்.

ஞானிகளை சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள்.

எதையும் எதிர்பாராமல் செய்யக்கூடியவர்கள்.

கம்பீரமும், கனிவும் கலந்த குரல் வளம் கொண்டவர்கள்.

நம்பிக்கை உடையவர்கள். உதவியை மறக்காதவர்கள்.

ஞானம் சம்பந்தமான தேடல்களையும், சாஸ்திரங்களையும் கற்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள்.

எந்நிலையிலும் தன்னிலை இறங்காதவர்கள்.

பலருக்கு முன் உதாரணமாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் விளங்கக்கூடியவர்கள்.

 எதிலும் துரிதமும், வேகமும் உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக