கொரோனா
தொற்று காரணமாக இந்த ஊரடங்கு நாட்களில் மக்களின் இயல்புநிலை பெரிதும்
பாதிக்கப்பட்டது. இதனால் பெரியளவில் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் விவசாயிகளும்,
சிறுதொழில் செய்பவர்களும் தான், இவர்களுக்கு உதவும் வகையில், வங்கிகள் குறைந்த
வட்டியுடன் குறைந்தளவு உடனடி கடன் வழங்க முன்வந்துள்ளது. அவற்றைப்பற்றி இந்த
பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
உடனடியாக கடன்
வேண்டுமா?
உடனடியாக
கடன் வேண்டுமா? அப்படியானால் நீங்கள் உடனே செல்ல வேண்டிய வங்கி, இந்தியன் வங்கி
தான். இந்த வங்கியில் தான் தற்பொழுது 7% எனும் நிலையான வட்டி வீதத்தில் நகைக் கடன்
கிடைக்கிறது. அதாவது, ரூ. 1,00,000-திற்கு மாதம் ரூ.583 என்ற குறைந்த வட்டியுடன்
தற்பொழுது கடன் வழங்கப்படுகிறது. சரியாகச் சொன்ன; நகை மதிப்பிலிருந்து 85% வரை
கடனாக உங்களுக்குக் கிடைக்கும்.
இந்தியன்
வங்கி
இந்தியன் வங்கியின் கீழ் நகைக் கடன்
வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.3,745 வரை நிதி
வழங்கப்படுகிறது. ஊரடங்கிற்குப் பின் குறைந்த வட்டியுடன் எளிமையாக நகைக் கடன்
பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளையை அணுகலாம்.
அதேபோல், சிறுதொழில், குறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் செய்யும்
நிறுவனங்களுக்கான கடன் திட்டங்களையும் இந்தியன் வங்கி தற்பொழுது வழங்குகிறது.
விவசாயிகள் மற்றும் கால்நடை
வளர்ப்பவர்களுக்கான அவசர கடன்
கிஸான் கடன் அட்டை (Kissan Credit
Card) வசதியுள்ள பயிர் செய்யும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு,
IND KCC கோவிட் Sahaya கடன் (IND KCC Covid Sahaya Loan) திட்டத்தின் கீழ் சுமார்
10 சதவிகித வரம்பு வரை சாஃப்ட் லோன் (soft loan) ஆகப் பெறலாம், இந்த கடனுக்கான
கட்டணத்தை 6 மாத கால அவகாசத்தில் சுலப தவணை மூலம் வாடிக்கையாளர்கள் திரும்பச்
செலுத்தலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
சுய உதவிக் குழுக்களுக்கான சாப்ட்
லோன்
இதேபோல், சுய உதவிக் குழுக்களின்
உதவிக்காக எஸ்எச்ஜி கோவிட் சகாய கடன் (SHG Covid Sahaya Loan) திட்டத்தின் கீழ்,
சுய உதவிக்குழு பெண் உறுப்பினர்களுக்கு தலா ரூ. 5,000 என்ற விதத்தில் 20
உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சுய உதவிக்குழு ரூ.1,00,000 வரை இந்தியன் வங்கி மூலம்
சாப்ட் லோன் பெறலாம். இதற்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள் சுலப தவணை முறையில்
திரும்பச் செலுத்தலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
லோன்
தொடர்பான சந்தேகங்களுக்கு
நகை கடன், சுலப வங்கி கடன் அல்லது
சாப்ட் லோன் தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இந்தியன்
வங்கியின் ஆன்லைன் பக்கத்தை விசிட் செய்யுங்கள். புதிய கடன் பெற விரும்பும்
வாடிக்கையாளர்கள் நேரடியாக அருகில் உள்ள இந்தியன் வங்கி கிளையையும் அணுகலாம் என்று
இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. பாதுகாப்பான ஆன்லைன் வங்கி சேவைக்கு இந்தியன்
வங்கியின் மொபைல் ஆப்ஸ்-ஐ பயன்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக