
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தின் அம்சங்களை பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களை சந்தா முறையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் (Nexon) காரை ஈசியாக பயன்படுத்தலாம்.
செம
டிமாண்ட்
கொரோனா
பாதிப்புக்கு மத்தியில் தனிநபர் கார்களுக்கான ட்மாண்ட் கடுமையாக அதிகரித்துள்ளது.
மக்கள் கொரோனா நெருக்கடிக்கு இடையே பாதுகாப்பாக பயணிக்க விரும்புகின்றனர். பொது
போக்குவரத்து குறைவாக இருப்பதும் மற்றொரு காரணம்.
டாடா சூப்பர் பிளான்
டாடா
மோட்டார்ஸ் நிறுவனத்தின் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 18 மாதம், 24 மாதம், 36
மாதம் என குறைந்தபட்ச காலத்தை தேர்வு செய்துகொள்ளலாம். 18 மாத காலத்திற்கு ஒவ்வொரு
மாதமும் ரூ.47,900 சந்தா செலுத்த வேண்டும். 24 மாத காலத்திற்கு மாதம் ரூ.44,900
மற்றும் 36 மாதத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.41,900 சந்தா செலுத்த வேண்டும்.
யாருக்கான திட்டம்?
நெக்ஸான்
ஒரு எலெக்ட்ரிக் வாகனம். வரும் காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல
எதிர்காலம் இருப்பதால் இத்திட்டத்தில் நெக்ஸானை பயன்படுத்த டாடா திட்டமிட்டுள்ளது.
எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதும் ஒரு முயற்சியே. ஒரு காருக்கு
உரிமையாளராகாமலேயே அதை பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு இத்திட்டம் ஒரு சிறந்த
சாய்ஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக