தனுஷின்
உத்தமபுத்திரன் படத்தில் நடித்த தெலுங்கு நடிகரான ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால்
மரணமடைந்துள்ளார்.
தமிழ்
மற்றும் தெலுங்கு திரையுலகில் வில்லனாகவும், பல குணச்சித்திர வேடங்களிலும்
நடித்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் தமிழில் ஆறு, உத்தமபுத்திரன், தர்மபுரி,
ஆஞ்சநேயா உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் சமரசிம்ஹா ரெட்டி, ரெடி, கிக் உள்ளிட்ட
பல படங்களிலும் நடித்தவர். இவர் கடைசியாக மகேஷ் பாபுவின் "சர்ரியலேரு
நிவ்வரு" என்ற படத்தில் நடித்திருந்தார்.
74 வயதான
இவர் மாரடைப்பு காரணமாக ஆந்திராவின் குண்டூரில் உள்ள தனது வீட்டில்
காலமாகியுள்ளார். தற்போது அவரது குடும்பத்திற்கு பலர் இரங்கல்களை தெரிவித்து
வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக