பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
அதன்படி வெகேஷன் மோட் என்ற புத்தம் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்சமயம் பீட்டா பயன்பாட்டளர்களின் சோதனையில் உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ஆண்ட்ராய்டுவாடிக்கையாளர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் சிறப்பு என்னவென்றால், அர்சிவ் செய்யப்பட்ட சாட்களையும் மியூட் செய்துகொள்ள முடியும். இதற்குமுன்பு வரை வாட்ஸ்அப்-ல் இந்த ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இந்த ஆப்ஷன் கொண்டுவரவுள்ளதாக அறிவித்த வாட்ஸ்அப் நிறுவனம் சிலா காரணங்களால் அதை கிடப்பில் போட்டது. இந்தநிலையில் மீண்டும் வெகேஷன் மோட் ஆப்ஷனை டெவலப் செய்துள்ளது. பின்பு இது விரைவில் பயன்பாட்டுக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக