ஐபிஎல் தொடரின் பங்குதாராக பெங்களூரை சேர்ந்த CRED நிறுவனம் இணைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான அட்டவணையையும் விரைவில் வெளியாகுமெனவும் தெரிவித்தார். இந்த தொடரில் பங்கேற்க 8 அணியின் வீரர்கள் அமீரகம் சென்றடைந்து, கட்டாய தனிப்படுத்துதலில் உள்ளனர். இந்த தொடரிலிருந்து விலகுவதாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரின் பங்குதாராக பெங்களூரை சேர்ந்த CRED நிறுவனம் இணைந்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு ஐபிஎல் ஸ்பாசராக ட்ரீம் லவன் நிறுவனம் ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக