மோட்டோரோலா
நிறுவனம் மோட்டோ ரேஸ்ர் 5 ஜி 2020 ஸ்மார்ட்போன் சாதனத்தைச் செப்டம்பர் 10 ஆம் தேதி
சீனாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோ ரேஸரின்
வாரிசாக பெரிய மேம்படுத்தல்களுடன் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 9 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று
கூறப்பட்டது. இப்போது, கிஸ்மோசினா வழியாக ஒரு டீஸர்
செப்டம்பர் 10 ஆம் தேதி மோட்டோ ரேஸ்ர் 5 ஜி 2020 ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக
வெளிவரும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்ட
மறுநாளான செப்டம்பர் 10 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும்.
மோட்டோரோலா
ஸ்மார்ட்போன் பற்றி அதிக தகவல் வெளியிடப்படவில்லை, இருப்பினும், பல கசிவுகள்
ஸ்மார்ட்போனின் அம்சங்களை விவரித்துள்ளன. இப்போது, வரவிருக்கும்
ரேஸ்ர் 5 ஜி 2020 இன் அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் டிப்ஸ்டர் ஈவன் பிளாஸ் வழியாக
வெளிவந்துள்ளது. இது சாதனத்தின் கோல்டு வேரியண்ட் தகவலை வெளிப்படுத்துகிறது.
கோல்டு வேரியண்ட் காட்சி அளவு பிளாக் வேரியண்ட் போலவே இருக்கும்.
புதிய
கோல்டு வண்ண வேரியண்ட் மோட்டோ ரேஸ்ர் 5 ஜி 2020 ஸ்மார்ட்போன் தடிமனான பெசல்கள்
இருப்பதைக் குறிக்கிறது. பின்புறம் கண்ணாடியால் ஆனது என்று எதிர்பார்க்கப்படுகிறது,
அதே நேரத்தில் முன்னோடி மோட்டோ ரேஸ்ர் பிளாஸ்டிக் பின்புறத்துடன் வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. மோட்டோ ரேஸ்ர் 5 ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும்
விவரக்குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
மோட்டோ
ரேஸ்ர் 5 ஜி, 6.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனம்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிரசஸருடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்
சேமிப்புடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் 2,800 mAh திறன் கொண்ட
இரட்டை பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னோடி மாடல் 2510 mAh
பேட்டரியுடன் வந்தது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை வழங்கும் என்று
கூறப்படுகிறது.
கேமராக்களைப்
பொறுத்தவரை, 48MP ஒற்றை பிரதான சென்சார் மற்றும் 20MP முன் சென்சார் ஆகியவற்றைக்
காண்பிக்கும். கேமரா அம்சங்கள் ஒரே மாதிரியாக மாறினால், கைபேசியில் மிகப்பெரிய
மேம்படுத்தல் கிடைக்கும். முன்னோடி மாடலில் 16 எம்பி மெயின் சென்சார் மற்றும் 5
எம்பி செல்பி கேமரா உள்ளது. அறிக்கையின்படி, கைபேசி முதலில் அமெரிக்காவிலும்
சீனாவிலும் வாங்குவதற்குக் கிடைக்கும். இருப்பினும், இந்தியாவில் எப்போது
அறிமுகமாகும் என்பது தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக