Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

பூமியில் உருவாகும் மர்மான ராட்சஸ பள்ளங்கள்! பீதியில் மக்கள்! உண்மை காரணம் என்ன?


பூமியில் ராட்சஸ பள்ளங்கள்
பூமியில் அவ்வப்போது சில விசித்திரமான விஷயங்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. இவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாகப் பூமியில் தோன்றி வரும் ராட்சஸ பள்ளங்களின் பின்னணியில் என்ன காரணம் ஒளிந்துள்ளது என்பது தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தில் உள்ளனர். இதை விளக்கமாகப் பார்க்கலாம்.
பூமியில் ராட்சஸ பள்ளங்கள்
ஏலியன் நிகழ்வுகள் மற்றும் மர்மமான நிகழ்வுகள் எல்லாம் பெரும்பாலும் ரஷ்யாவை சுற்றியே தான் நடந்து வருகின்றது. அப்படி தான் இந்த பூமியின் ராட்சஸ பள்ளங்களும் ரஷ்யாவில் உருவாகியுள்ளது. ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள இந்த மர்மமான பள்ளம் குறித்து பலவிதமான கருத்துக்கள் வெளியாகி வருகிறது. இதில், எதை உண்மை என்று நம்புவது என்பது நமக்கே சற்று சந்தேகம்தான் இருக்கிறது.
எத்தனை அடி ஆழம் தெரியுமா?
சைபீரியாவில் உள்ள தந்த்ர பகுதியில் தான் இந்த ராட்சஸ பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தொலைக்காட்சி குழுவினர் இந்த பள்ளங்களை படம்பிடித்துள்ளனர். பூமியில் தானாக மர்மமான முறையில் உருவாகியுள்ள இந்த பள்ளங்கள் சுமார் 100 அடி ஆழமும், 70 அடி விட்டமும் கொண்டுள்ளது என்று அந்த குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பூமியின் 9வது பள்ளம் இதுவா?
இது போன்ற மர்மமான பள்ளங்கள் கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் தோன்றி வருகிறது. இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 9வது பள்ளம் இதுவாகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் விண்கற்கள் விழுந்ததினால் இந்த பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
ஏலியன் விண்கலம் காரணமா?
இன்னும் சிலர் இது ஏலியன் விண்கலம் தரை இறங்கிச் சென்ற அடையாளமாக இருக்கலாம் என்று புதிய பீதியைக் கிளப்பியுள்ளார். இன்னும் சிலர் ராட்சஸ பள்ளத்தின் அடியில் நிலத்தடி இராணுவ ரகசிய அறைகள் இருக்கலாம் என்றும் பலர் பலவிதமான கருத்துக்களைப் பரப்பிவருகின்றனர்.
உண்மை வெளிவரும்
இந்நிலையில் மீத்தேன் வாயு வெடிப்பினால் இந்த ராட்சஸ பள்ளங்கள் பூமியில் உருவாகியிருக்கலாம் என்று சந்தேகத்தில் விஞ்ஞானிகள் தங்களின் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் உண்மை வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக