Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

பப்ஜி தடை நீங்குகிறதா? இந்திய அரசு நடவடிக்கையை திரும்பப்பெற தென் கொரியா நிறுவனம் முயற்சி

PUBG
இந்தியாவில் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு உட்பட 118 செயலிகளை அரசு முடக்கியிருக்கும் நிலையில், இந்தியாவில் தனது நிறுவனத்துடன் சீன நிறுவனமான  டென்சென்ட் நிறுவனம் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்து, பப்ஜி மொபைல்,  இனி இந்தியாவில் சீனாவின் டென்சென்ட் கேம்ஸ் நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாது என்றும் தென் கொரிய நிறுவனமான பப்ஜி கார்பரேஷன், அனைத்து துணை  நிறுவனங்களின் முழு பொறுப்பையும் ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, இந்திய சட்ட விதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு கேமர்கள் மீண்டும் ஆன்லைன்  களத்தில் இருப்பதற்கு தேவையான தீர்வை எட்டுவோம் என்று பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பப்ஜி (பிளேயர் அன்னோன்ஸ் பேட்டில்கிரவுண்ட்ஸ்)மொபைல் என்பது செல்பேசி விளையாட்டு ஆன்லைன் செயலி. இது அடிப்படையில் முழுமையான தென்  கொரிய கேமிங் நிறுவன தயாரிப்பாகும்.

பல்நோக்கு தளங்களில் பப்ஜி மொபைல் செயலியை வெவ்வேறு பிராந்தியங்களில் இயக்கி ஆட்டத்தில் பங்கேற்கும் நபருக்கு சிறந்த அனுபவத்தை தருவதே இந்த  விளையாட்டின் நோக்கம்.

அந்த நிறுவனதத்தின் சில பங்குகளை சீன நிறுவனமான டென்சென்ட் வாங்கியதை அடுத்து, பப்ஜி மொபைல், பப்ஜி மொபைல் லைட் ஆகிய செயலிகள், டென்சென்ட் கூட்டுடன் அறிமுகமாயின. இதனால் பப்ஜி விளையாட்டு செயலியை சீன தொடர்பு நிறுவன தயாரிப்பாகக் கருதி இந்தியா நடவடிக்கை  எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், டென்சென்ட் நிறுவனத்துடன் ஆன தமது தொழில்முறை உறவுகளை தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளதால் விரைவில்  அந்த நிறுவனம் மீதான தடையை அகற்றுவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பப்ஜி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து டென்சென்ட் நிறுவனம் இதுவரை தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவில்லை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆன்லைன் விளையாட்டு சந்தையாக பப்ஜி விளையாட்டு உள்ளது. அந்த விளையாட்டில் 1.30 கோடி பேர் தீவிர பங்கேற்பாளர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் அந்த விளையாட்டு செயலியை 17.5 கோடிக்கும் அதிகமானோர் பதவிறக்கம் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக