Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 நவம்பர், 2020

ரூ.1,640-விலையில் லாவா ஃபிளிப் போன் அறிமுகம்.! ஆளுக்கு ரெண்டு பார்சல்.!

பிளிப்கார்ட், அமேசான் தளங்களில்

லாவா நிறுவனம் ஃபிளிப் டிசைனுடன் லேட்டஸ்ட் பீச்சர் போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது லாவா ஃபிளிப் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இதன் விலை ரூ.1,640 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

இந்த புதிய பீச்சர் போன் மாலட் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது - சிவுப்பு மற்றும் நீலம். பின்பு இது விரைவில் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


வடிவமைப்பு மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான அம்சங்களையும் வழங்குகிறது இந்த அட்டகாசமான பீச்சர் போன் மாடல். இது ஸ்டைல் மற்றும் செயல்பாட்டின் சரியான கலவையாக அமைகிறது. அதன்படி லாவா ஃபிளிப் போன் ஆனது இளம் மற்றும் வயதான தலைமுறையினரை ஒரே மாதிரியாக ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தேஜிந்தர் சிங் (ஹெட்-ப்ராடெக்ட், லாவா இன்டர்நேஷனல் லிமிடெட்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


லாவா ஃபிளிப் போன் மாடல் 2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் பாலிகார்பனேட் பாடி மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போன் இராணுவ தர சான்றிதழ் மற்றும் பிரீமியம் 360 டிகிரி வெளிப்படையான பேக்கேஜிங் உடன் வருகிறது.


குறிப்பாக லாவா ஃபிளிப் போன் மாடல் டூயல் சிம்-ஐ ஆதரிக்கிறது மற்றும் சூப்பர் பேட்டரி பயன்முறை கொண்ட 1200 எம்ஏஎச் லி-அயன்

பேட்டரியுடன் உட்பொதிக்கப்பட்டுள்ளது. லாவா வெளியிட்ட தகவலின்படி இதன் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூன்று நாட்கள் வரை ஆயுளை வழங்கும்.

மேலும் இந்த சாதனத்தில் விஜிஏ கேமரா, மேலே பிளிங்க் கால் நோட்டிப்பிகேஷன் எல்இடி மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டிங்க் போன்ற அம்சங்களும் உள்ளது. பின்பு இந்த போன் 22 மொழிகளில் உள்வரும் டெக்ஸ்ட்களை ஆதரிக்கும்.

அதன்பின்பு பயனர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட ஏழு மொழிகளில் டைப் செய்ய உதவுகிறது ஃபிளிப் போன் மாடல்.

இந்த அட்டகாசமான பீச்சர் போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது இன்ஸ்டன்ட் டார்ச், வயர்லெஸ் எஃப்எம் ரெக்கார்டிங்இ நம்பர் டாக்கர் மற்றும் காண்டாக்ஸ் ஐகான்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக