Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 நவம்பர், 2020

வங்கியில் சம்பள கணக்கு இருக்கா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க.. ஜனவரி 1 முதல் புதிய திட்டம்..


காசோலை துண்டிப்பு முறை (Cheque Truncation System)

வங்கியில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு, வரும் 2021 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி பதிய மாற்றத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த புதிய மாற்றம் பற்றி வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஜனவரி முதல் நடைமுறைக்கு வரப்போகும் புதிய மாற்றம் என்னவென்று நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

காசோலை துண்டிப்பு முறை (Cheque Truncation System)

இந்திய ரிசர்வ் வங்கி ‘'காசோலை துண்டிப்பு முறை''(Cheque Truncation System) என்ற புதிய திட்டத்தை ஜனவரி 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சில நிபந்தனைகள் இனி கட்டாயம்

இந்த புதிய திட்டத்தின் படி, வாடிக்கையாளர்கள் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் சில நிபந்தனைகளை இனி கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, இனிமேல் வங்கியில் காசோலைகளைச் செலுத்துவதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

காசோலை மூலம் ரூ. 50,000 மேல் இனி பரிமாற்றமா?

மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் ஆகியவை மூலம் சம்மந்தப்பட்ட வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இனி காசோலை மூலம் ரூ. 50,000 மேல் பரிமாற்றம் செய்பவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகளில் பணத்தைப் பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகிய தகவலை வாடிக்கையாளர் வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ரிசர்வ் வங்கி உத்தரவு

வாடிக்கையாளர் இந்த தகவலை வங்கிக்குத் தெரியப்படுத்தும் வழிகளை, வங்கிகள் டிசம்பர் இறுதிக்கு முன்னதாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த முறை மூலம் யாருக்குக் காசோலை தரப்படுகிறது, அந்த காசோலை உண்மையானதா போன்ற தகவல்கள் இனி சரிபார்க்கப்படும்.

காசோலை மோசடிகள் தடுக்கப்படும்

ரூ.5 லட்சத்திற்கு மேற்படியான தொகையைக் காசோலை மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த முறை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு காரணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் படி இனி காசோலை மோசடிகள் நடப்பது தடுக்கப்படும் என்று ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வு

ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய திட்டம் பற்றிச் சம்மந்தப்பட்ட வங்கிகள், அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது வங்கிகளில் உள்ள அறிவிப்புப் பலகை மூலமாகவோ தகுந்த விழிப்புணர்வை விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

புதிய திட்டத்தைப் பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?

விரைவில் சம்பந்தப்பட்ட வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தியைத் தெரியப்படுத்தும் என்று எதிர்பார்க்பகப்டுகிறது. இந்த புதிய திட்டத்தைப் பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்? ரூ.50 ஆயிரத்திற்கு மேல் காசோலை மூலமாக வங்கியில் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி தேவைப்படும் தகவலை வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

 

பணம் பெறவோ, அனுப்பவோ முடியாது

வங்கிக்குத் தெரியப்படுத்தாமல் காசோலையை பயன்படுத்த நினைத்தாள், அந்த காசோலை மூலம் பணம் பெறவோ அல்லது பணம் செலுத்தவோ முடியாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2021 முதல் இந்த புதிய திட்டம் கட்டாயம் நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக