Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 10 நவம்பர், 2020

ரூ.6,999 மட்டுமே: உயர்தர அம்சங்களோடு Micromax In 1b ஸ்மார்ட்போன் முன்பதிவு தொடக்கம்!

நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு தொடக்கம்

மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போனை நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்த இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

மைக்ரோமேக்ஸ் இன் 1B

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. மைக்ரோமேக்ஸ் சாதனம் இன்(in) நோட் 1 மற்றும் இன் 1B என்ற இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1 ஸ்மார்ட்போன்

இந்தியச் சந்தையில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய மைக்ரோமேக்ஸ் இன்(in) ஸ்மார்ட்போன்கள் சியோமி, சாம்சங், ஒப்போ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் களமிறக்கப்பட்டது. இன் நோட் 1 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட் ரூ.10,999 ஆகவும், அதன் 4 ஜிபி / 128 ஜிபி வேரியண்ட் ரூ.12,499 என்ற விலையில் மிட்ரேஞ் ஸ்மார்ட்போன்களாக அறிமுகம் செய்யப்பட்டது.

2 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் வேரியண்ட்

அதேபோல் இன்1B ஸ்மார்ட்போன் இந்தியாவில் நம்ப முடியாத விலையில் அறிமுகம் செய்தது. மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போனின், 2 ஜிபி / 32 ஜிபி வேரியண்ட் ரூ.6,999 ஆகவும், இதன் 4 ஜிபி / 64 ஜிபி வேரியண்ட் ரூ.7,999 என்ற நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரோமேக்ஸ் இன் 1 பி மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது நீலம், பச்சை மற்றும் ஊதா ஆகும்.

நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு தொடக்கம்

மைக்ரோமேக்ஸ் இன்1B முன்பதிவு நவம்பர் 10 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தொடங்கியுள்ளது. இதை நிறுவனத்தின் டுவிட்டர் பக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் மைக்ரோமேக்ஸ் இன் 1பி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் நவம்பர் 26முதல் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்கும்.

மைக்ரோமேக்ஸ் இன் 1B அம்சங்கள்

மைக்ரோமேக்ஸ் இன் 1B ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இயக்கப்படுகிறது. இதில் இரட்டை நானோ சிம் உடன் வருகிறது. வாட்டர் டிராப் 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் விருப்பங்களில் கிடைக்கிறது.

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் என இரட்டை பின்புற கேமரா உள்ளது. அதோடு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி என இரட்டை சேமிப்பு வசதி இருக்கிறது. அதோடு மைக்ரோ எஸ்டிகார்ட் வழியாக சேமிப்பகத்தை விரிவாக்கலாம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

இணைப்பு ஆதரவுகளாக 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை உள்ளது. அதோடு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் இருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் இன் 1B சிறப்பம்சங்கள்

  • 6.52' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி 35 பிராசஸர்
  • 2 ஜிபி / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு OS இயங்குதளம்
  • 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP ஆழ சென்சார்
  • 8 எம்.பி கேமரா
  • 10W சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி
 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக