இ-மெயிலுக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததன் விளைவாக வாடிக்கையாளர் ஒருவர் பல லட்ச ரூபாய் இழந்ததன் பின்னணி குறித்து இங்கே காணலாம்.
நாளுக்கு நாள்
இணைய வழிக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே ஆன்லைன் வாயிலாக பணத்தைக் கையாள்பவர்கள்
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கான உதவிக்கு சைபர் கிரைம் போலீசார் இருக்கின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது வங்கிக் கணக்கை
இண்டர்நெட் பேக்கிங் மூலம் பயன்படுத்த முயற்சித்துள்ளார். அப்போது தனது மொபைல் எண்
வங்கிக் கணக்கில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது கணக்கில் சம்பந்தமே
இல்லாத 5 வங்கிக் கணக்குகள் சேர்க்கப்பட்டிருந்தன.
இதன்மூலம் ரூ.35.89 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே ஹைதராபாத்
சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் விசாரணை நடத்தியதில் ஆந்திராவைச்
சேர்ந்த தமரன்னா சிரஞ்சீவி என்ற நபரைக் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிரஞ்சீவி பல்வேறு வங்கிகளில் கணக்கு தொடங்கியிருக்கிறார்.
இதுதொடர்பான தகவல்களை தனது நண்பர் திவாகர் ஸ்ரீவஸ்தாவிற்கு அளித்துள்ளார். இவர் தான்
ஐடி ரீஃபண்ட் என்று போலியான லிங்க்குகளை உருவாக்கி, அதனைப் பலருக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த லிங்கை கிளிக் செய்த பலரும் பணத்தை இழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான், ஹைதராபாத்
சைபர் கிரைம் போலீசில் துணிந்து புகார் அளித்துள்ளார். இவர் இ-மெயில் லிங்கை கிளிக்
செய்தவுடன், அவருடைய மொபைலை தங்கள் வசத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
உடனே ஹேக் செய்து இண்டர்நெட் பேங்கில் நுழைந்து கைவரிசை காட்டியுள்ளனர். இந்நிலையில்
போலீசார் சரியான பாதையில் விசாரணை நடத்தி குற்றவாளியைக் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக