கோவை அருகே காதலியின் தனிப்பட்ட புகைப்படத்தை பெண்ணின் தந்தைக்கு அனுப்பிய வாலிபர் கைது.
கோவை குனியமத்தூரைச் சேர்ந்த 22 வயதான பெண்ணும் தூத்துக்குடியைச் சேர்ந்த தேவேஷ்வர் என்ற வாலிபரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். இருவரும் பழகி காதலிக்க தொடங்கியுள்ளனர். தற்போதைய ஊரடங்கில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் இருவரும் பல மாதங்களாக சந்திக்காமல் செல்போனிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தேவேஷ்வர் காதலியிடம், உன்னை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு உன்னுடைய
புகைப்படங்களை அனுப்பி வை. அதில் சில படங்களை ஆடையில்லாமல் எடுத்து அனுப்பு என்று கேட்டுள்ளார்.
அதற்கு மாணவி, '' நாம்தான் வீடியோ காலில் பேசிவருகிறோமே, புகை படங்களை எதற்கு கேட்கிறாய்
என்றுள்ளார்.
இருப்பினும், தேவேஷ்வர் விடாமல் கெஞ்சி கேட்டதால், மாணவி தனது தனிப்பட்ட புகைப்படங்களை
வாட்சப்பில் அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில், மாணவியின் காதல் விவகாரம் அவர்களது
பெற்றோருக்கு தெரிய வரவே, இனிமேல் தேவேஷ்வர் இடம் பேசக்கூடாது என்று கூறி செல்போனை
பிடுங்கி வைத்துவிட்டனர்.
இதனால் சில நாட்களாக காதலனிடம் மாணவி பேசாமல் இருந்ததால், அதுகுறித்து தேவேஷ்வர் கேட்டுள்ளார்.
மாணவி நடந்ததை கூறியதோடு, இனிமேல் நான் உன்னிடம் பேசமுடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மாணவன், காதலி அனுப்பி வைத்த ஆபாச புகைப்படங்களை மாணவியின் தந்தைக்கு
அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தேவேஷ்வர் மீது போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் தேவேஷ்வர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது
செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக