முதற்கட்டமாக 9 லட்சம் ரூபாய் செலவில் மூன்று அம்மா நடமாடும் உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.
இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக நடமாடும் அம்மா உணவகம் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைத்துள்ளார்.
பிற அம்மா உணகவகங்கல் போலவே நடமாடும் அம்மா உணவகங்களும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் இயங்கும்.
உணவு வகைகளும் அம்மா உணவகத்தில் கிடைப்பது போலவே அனைத்தும் கிடைக்கும்.
காலையில் இட்லி 1 ரூபாய், பொங்கல் 5 ரூபாய்க்கும் விற்கப்படும். மதியம் சாம்பார் சாதம் 5 ரூபாய், ஏழுமிச்சைச் சாதம் 5 ரூபாய், கருவேப்பிலை சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய் என விற்கப்படும்.
இரவில் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி வழங்கப்படும். விலையை பொறுத்தவரையில் அம்மா உணவகத்தில் உள்ள அதே விலையில் உணவு வழங்கப்படுகிறது. விரைவில் சென்னை முழுவதும் இந்த நடமாடும் அம்மா உணவகம் சேவை விரிவாக்கம் செய்யப்படும்.
நடமாடும் அம்மா உணவகத்தின் துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக