திரை அரங்குகள் நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், தீபாவளிக்கும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
சரி, பொங்கலுக்குத் தான் மாஸ்டர் வெளியாகுமா என்று கேட்ட போது, அப்போது உள்ள சூழலைப் பொருத்து பார்ப்போம் என்று கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவிட்-19 தொற்று பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தாத நிலையில், நவம்பர் 10 முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரை அரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய், அஜித், ரஜினி உள்ளிட பெரும் நடிகர்கள் படம் என்றால் திரை அரங்குகள் விழாக்கோலமாகும், அதிகம் கூட்டம் சேரும். எனவே தனது ரசிகர்கள் கூட்டம் சேருவதால் கோவிட்-19 தொற்றுப் பரவிவிடக்கூடாது என்று விஜய் கவனமாக உள்ளதாகவும், இன்னும் சில மாதங்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று விஜய் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
அதனால் தான் தீபாவளிக்கு மாஸ்டர் வெளியாகாது என்று தயாரிப்பாளர் பிரிட்டோ அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஒருவேளை தீபாவளிக்கு மாஸ்டர் திரை அரங்குகளில் ரிலீஸானாலும், மக்கள் அதை எந்த அளவுக்கு வரவேற்பார்கள், கோவிட்-19 அச்சம் காரணமாக ரசிகர்கள் வராமல் போனால் வசூல் பாதிப்படையும். தொற்று பரவும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் பொழுதுபோக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக