அண்மையில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் 12 என்ற புதிய ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் கேலக்ஸி எம் 12 சாதனத்தை தவிர கேலக்ஸி எம் 42 என்ற சாதனத்திலும் சாம்சங் நிறுவனம் வேலை செய்வதாக ஒரு லீக் தகவல் வெளியானது.
குறிப்பாக இப்போது வெளியான தகவலின்படி கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் பற்றிய விவரங்களும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த வடிவமைப்புடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போன் ஆனது பேட்டரி 3 சி சான்றிதழ் வலைத்தளம் மற்றும் டெக்ரா சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த 3சி பட்யலில் இந்த ஸ்மார்ட்போன் 5830 எம்ஏஎச் என்ற மதிப்பிட்ட திறனைக் கொண்டுள்ளது. இது கேலக்ஸி M42 ஸ்மார்ட்போனில் 6,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பேக் செய்யப்படும் என்பதைக் குறிக்கிறது.
குறிப்பாக இதே பேட்டரி (மாடல் நம்பர் EB-BM425ABY) சமீபத்தில் இந்தியாவில் உள்ள இந்திய தர நிர்ணய பணியகத்திலும் (BIS) காணப்பட்டது. பின்பு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகமான வேகத்தில் இந்திய சந்தைக்கு வரும் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போன் மாடல் 64 எம்பி பிரைமரி கேமராவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எம் 42 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது கேலக்ஸி ஏ 42 5ஜி மாடலின் வாட்டர்டு-டவுன் பதிப்பாக, அதாவது குறைக்கப்பட்ட அம்சங்களை கொண்ட எடிஷனாக இருக்கும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் அளவிலான டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு கேலக்ஸி எம் 12 சாதனம் ஆனது சற்று தடிமனாக இருக்கும் என்றும், மற்ற பெஸல்கள் அனைத்தும் மிகவும் குறுகலானவைகளாக இருக்கும்.
கேலக்ஸி எம் 12 சாதனம் ஆனது ஒரு தனித்துவமான டூயல்-டோன்டு பூச்சு கொண்ட பின்பக்க பேனல் மற்றும் கீழே பளபளப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. பின்பு எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட சதுர வடிவிலான குவாட் பின்புற கேமரா அமைப்பையும் வெளிப்படுத்துகிறது.
கேலக்ஸி எம் 12 சாதனத்தின் பக்கவாட்டில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஹெட்ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. பின்பு இதன் வால்யூம் ராக்கர்கள் மற்றும் பவர் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் இருக்கும்,சிம் பிளேட் ஆனது இடது பக்கத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக