பெரும்பாலும் நாம் நமது தொலைபேசியின் வைஃபை-ஐ இயக்கும்போது, பல இலவச வைஃபை இணைப்புகள் இருப்பதை நாம் பார்க்கிறோம். சில சமயங்களில் நாமும் அந்த இலவச வை-ஃபை இணைப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் நமது தொலைபேசியை இணைத்து பயன்படுத்த தொடங்குகிறோம்.
இவற்றில் பெரும்பாலான Wi-Fi இணைப்புகள், வெறும் இணைப்புகள் மட்டுமல்ல, அவை உண்மையில் ஹேக்கர்கள் நமக்கு விரிக்கும் வலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவற்றால் நாம் பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இலவச இணைப்புகள் மூலம் ஹேக்கர்கள் நமது தரவுகளையும் திருடக்கூடும்.
இப்படிபட்ட மோசடிக்காரர்கள் மற்றும் ஹேக்கர்களால் (Hackers) பாதிக்கப்படாமல் நீங்கள் இலவச Wi-Fi-ஐ பயன்படுத்த விரும்பினால் உங்களுக்காக நாங்கள் ஒரு ட்ரிக்கை கூறவுள்ளோம். இதன் உதவியுடன் நீங்கள் இலவச Wi-Fi-ஐயும் பயன்படுத்தலாம், ஹேக்கர்களின் வலையிலும் சிக்காமல் இருக்கலாம்.
இந்த முறையில் ஹேக்ககளிடமிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
ஹேக்கர்களைத் தவிர்க்க, உங்கள் தொலைபேசியின் Settings-க்குச் சென்று Connections-ல் கிளிக் செய்யவும்.
இப்போது Wi-Fi-ல் tap செய்யவும். அதன் பிறகு உள்ளே இருக்கும் மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து Settings-ல் கிளிக் செய்து Advanced-க்கு செல்லவும்.
நீங்கள் advanced-ல் கிளிக் செய்தவுடன், பல ஆப்ஷன்களைக் காண்பீர்கள். இவற்றில் நீங்கள் ‘Detect Suspiciois Networks’-ஐ ஆன் செய்ய வேண்டும்.
உங்கள் தொலைபேசியை தெரியாத Wi-Fi இணைப்புடன் (Wi-Fi Network) இணைக்கும்போதெல்லாம், இந்த அமைப்பை எப்போதும் On-னில் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நமது மொபைல் ஃபோனையும் அதில் உள்ள தரவுகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிக முக்கியமாகும். நம் தனிப்பட்ட விவரங்கள், மற்றவர்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள், நமது வங்கி பணப் பரிவர்த்தனைகள், அலுவலக விவரங்கள், வணிக விவரங்கள் என நம் ஃபோனில் பல தகவல்கள் இருக்கின்றன. இவை ஹேக்கர்கள் அல்லது மோசடிக்காரர்கள் கையில் கிடைத்தால், அதனால் நமக்கு பல பிரச்சனைகள் வரக்கூடும். ஆகையால் இப்படிப்பட்ட உதவிக் குறிப்புகளை பயன்படுத்தி நாம் நமது ஃபோனையும் தரவுகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும் அறிந்து கொள்வோம் , உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக