போலீஸாரின் அதிரடி அறிவிப்பால் 68,943 செய்வதறியாமல் தவிக்க தொடங்கியிருக்கின்றனர். இதற்கான முழுமையான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
விதிமீறல் ஆசாமிகளுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், போக்குவரத்து போலீஸார் அதிகம் கையாளக்கூடிய நடவடிக்கையில் ஒன்றாக அபராத செல்லாண் இருக்கின்றது. ஆமாங்க, பெரும்பாலான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத்தை மட்டுமே தண்டனையாக போலீஸார் வழங்கி வருகின்றனர்.
ஆனால், இதனை பெரும்பாலான விதிமீறல் வாதிகள் சரியாக செலுத்துவதில்லை. அத்தகைய குறிப்பிட்ட சில நபர்களுக்கே ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்ட போலீஸார் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட நாட்களாக அபராதத்தைச் செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளை உடனடியாக அபராதத்தைச் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் 68,943 பேர் விதிமீறல் காரணத்திற்காக அபராதச் செல்லாணைப் பெற்றிருக்கின்றனர். இவர்களையே இரு நாட்களுக்குள் உரிய அபராதத்தைச் செலுத்தமாறு மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர். அபராதத்தைச் செலுத்த தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதுகுறித்த மாவட்ட எஸ்பி சித்தார்தா கவுசல் கூறியதாவது, "நடப்பாண்டு தொடங்கி இதுவரை 1.51 லட்சம் வாகனங்களுக்கு ரூ. 4.6 கோடி மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக" தகவல் தெரிவித்தார். இவர்களில் 82,832 பேர் அபராதத்திற்கான தொகையை ஆன்-லைன் வாயிலாக செலுத்தியிருக்கின்றனர். மீதமுள்ள 68,943 இதுவரை அபராதத்தை செலுத்தாமல் தற்போது வரை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர்.
இதனால் சுமார் ரூ. 2.48 கோடி நிலுவையில் இருக்கின்றது. எனவே, சம்பந்தபட்ட வாகனங்களின் உரிமையாளர்களை உடனடியாக இரண்டு நாட்களுக்குள் அபரபாதத்தை ஆன்லைன் அல்லது பிற வழிகள் மூலமாக அபராதத்தை செலுத்துமாறு பிரகாசம் மாவட்ட போலீஸார் உத்தரவிட்டிருக்கின்றனர்.
தொடர்ந்து, பணம் செலுத்த தவறும் நபர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் அவர்கள் விடுத்துள்ளனர். இதுதவிர, சாலையோர சட்ட விரோத ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக தாங்களே அகற்றிக் கொள்ளுமாறு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார். இல்லையெனில் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கின்றார்.
சாலை விபத்துகளைத் தடுக்கும் விதமாக இந்தியாவின் அனைத்து மாநில போலீஸாரும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக இரும்பு கரத்தை நீட்ட ஆரம்பித்துள்ளனர். இதனடிப்படையிலேயே ஆந்திர போலீஸார் உடனடியாக அபராதத்தைச் செலுத்துமாறு உத்தரவிட்டிருக்கின்றனர்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக