Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 நவம்பர், 2020

மின்சார டூ-வீலர்களுக்கான பிரத்யேக டயர் அறிமுகம்... இந்தியர்களுக்காக உலகின் 9வது மிக பெரிய டயர் நிறுவனம்

 மின்சார டூ-வீலர்களுக்கான பிரத்யேக டயர் அறிமுகம்... இந்தியர்களுக்காக உலகின் 9வது மிக பெரிய டயர் நிறுவனம் அதிரடி! வேற லெவல் டயருங்க!!

உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறவனமான மேக்ஸிஸ், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக டயரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 உலகின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனங்களில் மேக்ஸிஸ் நிறுவனமும் ஒன்று. தாய்வான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்பதாம் இடத்தில் இருக்கின்றது. இந்த ஜாம்பவான் நிறுவனமே மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பிரத்யேக டயர்களை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த புதுமுக டயருக்கு எம்922எஃப் என்ற பெயரை அந்நிறுவனம் வைத்துள்ளது. மின்சார வாகன பயன்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த டயர் உருவாக்கப்பட்டிருப்பதாக மேக்ஸிஸ் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், இதனைப் பயன்படுத்தினால் மின்சார வாகனம் வழங்கக்கூடிய ரேஞ்ஜை சற்று உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் அது கூறியுள்ளது.


அதாவது, மின்சார வாகனம் ரேஞ்ஜை உயர்த்திக் கொடுப்பதற்கு ஏதுவான வடிவத்தில் இதனை உருவாக்கியிருப்பதாக மேக்ஸிஸ் தகவல் வெளியிட்டுள்ளது. எனவே, வழக்கமான ரேஞ்ஜைவிட கூடுதலாக ஒரு சில கிமீ-களை இந்த டயரைப் பொருத்துவதன் மூலம் பெற முடியும் என கூறப்படகின்றது.

 

இது ஓர் ட்யூப்-லெஸ் டயராகும். அதாவது, இந்த டயரை பயன்படுத்துவதற்கு ட்யூப் தேவைப்படாது. இந்த டயர் 12 இன்ச் அளவுள்ள ரிம்களில் பொருத்தக்கூடிய அளவில் மட்டுமே தற்போது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இருப்பினும், இரு விதமான பிரிவுகளில் அது காணப்படுகின்றது. அதாவது, 90/90-12 மற்றும் 120/70-12 ஆகிய அளவு தேர்வுகளில் புதுமுக எம்922எஃப் டயர்கள் விற்பனைக்குக் கிடைக்கிறது.


மேலும், இந்த டயர் ஸ்பீடு ரேட்டிங்கில் 'ஜே' எனும் சான்றைப் பெற்றிருக்கின்றது. அதாவது, அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தையும், சுமை அட்டவணையில் 44 என்ற மதிப்பையும் பெற்றிருக்கின்றது. இந்த மதிப்புகள் 90/90-12 அளவுள்ள டயர்களுடையதாகும்.


இதேபோன்று, 120/70-12 அளவுள்ள டயரின் மதிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டயர் 'எல்' ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இது மணிக்கு 120 கிமீ வேகத்தையும், 51 சுமை அட்டவணையையும் குறிக்கக்கூடியதாகும். பன்முக பயன்பாட்டிற்கு ஏற்ப டயரின் வடிவமைப்பு உள்ளது. இதுவே, மின்சார வாகனத்தின் ரேஞ்ஜை ஏற்றி வழங்க உதவுகின்றது.


இதன் உருவாக்கத்திற்கு சில மாறுபட்ட ரப்பர் மூலக்கூறுகளை பயன்படுத்தியிருப்பதாக மேக்ஸிஸ் தெரிவித்துள்ளது. இது பிற டயர்களைப் போன்றில்லாமல், சற்று குறைந்த எடையில் காட்சியளிக்கின்றது. மேலும், டயர் ரோல்லிங் எதிர்ப்பு திறன் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது, டயரின் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுகின்றது. பொதுவாக, மின்சார ஸ்கூட்டர்களுக்கு குறைந்த ரோல்லிங் ரெசிஸ்டன்ஸ் முக்கிய தேவையாக இருக்கின்றது.


இதனை, மேக்ஸிஸ் எம்922எஃப் உறுதிப்படுத்தும். குறிப்பாக, சாலை மற்றும் டயருக்கு இடையே இருக்கும் அதிக உராய்வை இது ஏற்படுத்தாத வண்ணம் இருக்கின்றது. இதனால்தான் டயர் மிகவும் ஸ்மூத்தாக பயணிக்கின்றது. தொடர்ந்து, ஈரமான மற்றும் வரண்ட நிலப்பகுதியிலும் சிறப்பான இயக்கத்தை வழங்கும் வகையில் டயரின் பக்கவாட்டு பகுதியில் வெட்டுக்களும், மையப்பகுதியில் கோடு போன்ற வெட்டும் வழங்கப்பட்டுள்ளது.


இதுவே, சிறந்த பிடிமானத்திற்கு உதவுகின்றது. இந்த அனைத்து மாற்றங்களுமே இந்த டயரை மின்சார இருசக்கர வாகனத்திற்கான ஸ்பெஷலிஸ்ட் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மின்சார மோட்டாருக்கு நண்பனாகவும் செயல்படும் திறனையும் இது பெற்றிருக்கின்றது.


இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இம்மாதிரியானநிலையில், மேக்ஸிஸ் நிறுவனம், அதன் பிரத்யேக எம்922எஃப் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான டயரை அறிமுகம் செய்திருப்பது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்த புதிய மேக்ஸிஸ் எம்922எஃப் டயர் அறிமுகம்குறித்து மேக்ஸிஸ் நிறுவனத்தின் இந்தியாவின் சந்தைப்படுத்தல் தலைவர் பிங்-லின் வு கூறுகையில், "இது இந்திய அரசாங்கத்தின் 'தூய்மையான இந்தியா' மிஷனுக்கு பங்களிப்பதற்கான எங்கள் முதல் படியாகும். குறிப்பாக இந்த தனித்துவமான டயர்களை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய சந்தையில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனம் நல்ல வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இது அடுத்த சில ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சியைக் காணும். மாற்று எரிபொருள் வாகன தொழில்நுட்பத்திற்கான டயர்களை தயாரிப்பதில் மேக்ஸிஸ் ஒரு உலகத் தலைவர். எங்கள் சிறப்பு தொழில்நுட்ப அறிவைக் கொண்டு உருவாக்கியிருப்பதால், இந்த டயர்கள் இந்திய நிலப்பரப்புக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.


மேக்ஸிஸ் நிறுவனம் இந்த புதுமுக டயருக்கு மிகச்சிறந்த உத்தரவாதத்தை வழங்குகின்றது. 5+1 எனும் உத்தரவாதத்தை எந்தவொரு நிபந்தனையுமின்றி அது அறிவித்துள்ளது. இந்த உத்தரவாதத்தின்கீழ் எந்தவொரு கேள்வியுமின்றி டயருக்கான பதில் கொடுக்கப்பட என இருக்கின்றது. தற்போது இந்த டயரின் விலை வெளியிடப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக