ரெனால்ட் ட்ரைபர் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டின் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு தாமதமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
ட்ரைபர் காம்பெக்ட்-எம்பிவி காரின் செயல்திறன்மிக்க டர்போ-பெட்ரோல் வேரியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக முன்னதாக ரெனால்ட் நிறுவனம் கூறியிருந்தது.
இந்த நிலையில் தற்போது ஆட்டோகார் இந்தியா செய்திதளம் மூலம் வெளிவந்துள்ள தகவலில்
இந்த புதிய என்ஜின் தேர்வை ட்ரைபரில் அடுத்த ஆண்டில் கொண்டுவரவே ரெனால்ட் நிறுவனம்
திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் புத்தம் புதிய க்ரிகர் காருடன்
இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் 2021ல் அறிமுகப்படுத்தப்படலாம்.
ரெனால்ட் & நிஸான் நிறுவனங்களின் கூட்டணி முயற்சியில் புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் எச்ஆர்10 என்ற குறியீட்டு பெயரால் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த டர்போ என்ஜின் நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் க்ரிகர் என இரு நிறுவனங்களின் எதிர்கால மாடல்களிலும் வழங்கப்படவுள்ளன.
இந்த 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 99 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.
இந்த எச்ஆர்10 என்ஜின் ஆனது தற்சமயம் ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் கிக்ஸ் என இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் எச்ஆர்13 டர்போ-பெட்ரோல் என்ஜினில் இருந்து வழித்தோன்றலாக கொண்டுவரப்பட்டுள்ளது. ப்ளாட்ஃபாரத்திற்கு தகுந்தாற்போல் இரு நிறுவனங்களும் என்ஜினின் கன கொள்ளவை குறைத்து கொண்டுள்ளன.
என்ஜின் மாற்றம் தவிர்த்து ட்ரைபர் டர்போ வேரியண்ட்டின் தோற்றம் கிட்டத்தட்ட
ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை தான் ஒத்திருக்கும் என்றாலும், சில காஸ்மெட்டிக்
மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக ட்ரைபரின் டாப்-ட்ரிம்களில் கூட தற்சமயம்
வழங்கபடாத அலாய் சக்கரங்களை அதன் டர்போ வேரியண்ட் பெற்றுவரலாம்.
தற்சமயம் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ற ஒற்றை என்ஜின் தேர்வுடன் விற்பனை
செய்யப்பட்டுவரும் ட்ரைபரின் விற்பனையை புதிய டர்போ-பெட்ரோல் வேரியண்ட்
அதிகரிக்கும் என ரெனால்ட் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஏனெனில் என்ஜின் மற்றும்
ட்ரான்ஸ்மிஷன் என இரண்டின் தேர்வுகளும் இந்த எம்பிவி காரில் அதிகரிக்கவுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக