Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 நவம்பர், 2020

எந்த இடங்களில் மூதேவி வாசம் செய்வாள் தெரியுமா...?

எந்த இடங்களில் மூதேவி வாசம் செய்வாள் தெரியுமா...?

வீட்டில் விடி விளக்கு எரியச் செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்ட பின் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையெனில் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.

சில நிறுவனங்கள், கடைகள், வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லா விளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்து காணப்பட்டால், அங்கு மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தமாகும்.

திருமாலின் கூர்ம அவதாரத்தில் பாற்கடல் கடையப்பட்ட போது, லட்சுமி தேவி தோன்றுவதற்கு முன் தோன்றியதால் இவர் மூத்த தேவி என அழைக்கப்படுகிறார்.  மேலும், சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் அமைக்கப்படும் ஒன்பது ஆபரணங்களில்(படிகள்) இரண்டாவது ஆபரணமாக தவ்வை  இருக்கிறார்.

துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல், அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம்,  எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்து செயல்களுமே மூதேவியின் அடையாளங்களாகும்.

மேலும் நமது வீட்டில் மூதேவி வராமல் இருப்பதற்கு, தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக