Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 நவம்பர், 2020

ஹோண்டா பைக்கை தாறுமாறான வேகத்தில் துரத்திய லாரி டிரைவர்... அப்புறம் நடந்ததுதான் கெத்தான சம்பவம்...

 

ஹோண்டா பைக்கை தாறுமாறான வேகத்தில் துரத்திய லாரி டிரைவர்... அப்புறம் நடந்ததுதான் கெத்தான சம்பவம்...

ஹோண்டா மோட்டார்சைக்கிளை பார்த்ததும், லாரி ஓட்டுனர் ஒருவர் தாறுமாறான வேகத்தில் துரத்தி வந்தார். அது ஏன்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிளாசிக் ரெட்ரோ மோட்டார்சைக்கிளான இது, ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக களம் கண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன.

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிளில், 349 சிசி, 4 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.78 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள் பலரின் கவனத்தை, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 தற்போது ஈர்த்து வருகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அபினவ் பட் என்ற யூ-டியூபர் சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலை சாலையில், ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தார்.


அப்போது லாரி ஓட்டுனர் ஒருவர் முரட்டுத்தனமாக அவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். எனவே அங்கிருந்து சென்று விடும் நோக்கில், அபினவ் பட் மோட்டார்சைக்கிளின் வேகத்தை அதிகரித்துள்ளார். ஆனால் அதற்கு ஏற்ப லாரியும் அவரை வேகமாக பின் தொடர்ந்தது. இதனால் அபினவ் பட்டிற்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

எனவே மோட்டார்சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி விட்டு, லாரிக்கு வழி விட முடிவு செய்தார். இதன்படி அவர் மோட்டார்சைக்கிளை சாலையோரமாக நிறுத்தியும், லாரி அவரை கடந்து செல்லவில்லை. அதற்கு மாறாக மோட்டார்சைக்கிளுக்கு கொஞ்சம் முன்பாக லாரி நிறுத்தப்பட்டது. அதில் இருந்த ஓட்டுனர் கீழே இறங்கி வந்தார்.


அபினவ் பட்டிற்கு ஆரம்பத்தில் என்ன நடக்கிறது? என்றே புரியவில்லை. ஆனால் லாரி ஓட்டுனர் கீழே இறங்கி வந்ததும், அவரது சந்தேகமும், குழப்பமும் தீர்ந்தது. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை நெருக்கமாக பார்ப்பதற்காகவும், அந்த பைக் பற்றிய சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்காகவும்தான் லாரி ஓட்டுனர் வேகமாக அபினவ் பட்டை பின் தொடர்ந்துள்ளார்.


அந்த லாரி ஓட்டுனர் தீவிரமான மோட்டார்சைக்கிள் ஆர்வலர் ஆவார். எனவே சந்தைக்கு புதிதாக வந்துள்ள ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவர் அபினவ் பட்டை விரட்டியுள்ளார். அந்த லாரி ஓட்டுனரின் மனதில் 2 கேள்விகள் இருந்தன. ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் எவ்வளவு மைலேஜ் தருகிறது? என்பது முதல் கேள்வி.


இதற்கு அபினவ் பட், ஒரு லிட்டருக்கு 40 கிலோ மீட்டர்கள் என பதில் அளித்தார். ஹோண்டா நிறுவனம் ஹைனெஸ் சிபி350 பைக்கை தனது அனைத்து ஷோரூம்கள் வாயிலாகவும் விற்பனை செய்கிறதா? என்பது இரண்டாவது கேள்வி. ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில் பிக்விங் டீலர்ஷிப்கள் மூலமாக மட்டுமே ஹைனெஸ் சிபி350 பைக்கை விற்பனை செய்கிறது என்பதுதான் இந்த கேள்விக்கான பதில்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் வழக்கமான டீலர்ஷிப்களுடன் ஒப்பிடும்போது, பிக்விங் பிரீமியம் டீலர்ஷிப்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு சரியான போட்டி சந்தைக்கு வந்து விட்டது என்பதற்கு இச்சம்பவத்தை ஒரு உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக