Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 நவம்பர், 2020

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா வி4 அட்வென்ச்சர் டூரர் பைக் பொது பார்வைக்கு வந்தது!

புதிய தலைமுறை டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா வி4 சூப்பர் பைக் அறிமுகம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தலைமுறை டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா வி4 அட்வென்ச்சர் டூரர் பைக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனத்தின் வெற்றிகரமான அட்வென்ச்சர் டூரர் பைக் மாடல்களாக மல்டிஸ்ட்ரேடா வரிசை உள்ளது. இந்த மல்டிஸ்ட்ரேடா குடும்ப வரிசையில் எஞ்சின் திறன் அடிப்படையில் பல மாடல்களை டுகாட்டி விற்பனை செய்து வருகிறது.இந்த மல்டிஸ்ட்ரேடா வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மாடலாக 1200சிசி மாடல் உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் 18 ஆண்டுகளில் 1.10 லட்சம் யூனிட்டுகள் என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புத்தம் புதிய எஞ்சின் மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய தலைமுறை மாடலாக மல்டிஸ்ட்ரேடா 1200 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நான்காம் தலைமுறை மாடலாக வந்திருக்கும் இந்த புதிய பைக் மாடல் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா வி4 என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

அனைத்து நிலபரப்புகளுக்கு ஏற்ற தகவமைப்பு அம்சங்கள், சக்திவாய்ந்த எஞ்சின், நீண்ட தூரம் அலுப்பில்லாத பயணத்தை வழங்கும் இருக்கை மற்றும் சொகுசு அம்சங்களுடன் இந்த டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா வி4 பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் ஸ்டான்டர்டு, வி4எஸ் மற்றும் வி4 எஸ் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

மோட்டோஜீபி பந்தய பைக்குகளுக்கு இணையான வடிவமைப்பு மற்றும் உறுதித்தன்மை கொண்ட சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, அனைத்து நிலப்பரப்புகளையும் எதிர்கொள்ளும் சிறிய மாற்றங்களுடன் இந்த சேஸீ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பைக்கில் வி4 க்ரான்டூரிஷ்மோ என்ற பெயரில் குறிப்பிடப்படும் புதிய எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 66.7 கிலோ எடை கொண்டது. அடக்கமான அதே சமயம் உறுதியான பாகங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த 1,158சிசி எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் டுகாட்டி குயிக் ஷிஃப்டர் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

இந்த எஞ்சினின் மிக முக்கிய அம்சமாக, குறைவான பராமரிப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வழக்கமான பராமரிப்பு இடைவெளி என்பது 60,000 கிமீ வரை கொடுக்கப்படுவது இதன் கட்டமைப்பு மற்றும் தரத்திற்கு சான்றாக பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில் 22 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா வி4 பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட்டுகள், 6.5 அங்குல டிஎஃப்டி திரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அட்ஜெஸ்ட் வசதியுடன் விண்ட்ஸ்க்ரீன், நக்குள் கார்டுகள், 12V சார்ஜிங் சாக்கெட், லக்கேஜ் ரேக், ஸ்பிளிட் இருக்கைகள், 22 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் ஆகியவை உள்ளன.

இந்த பைக்கில் டுகாட்டி வீலி கன்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப அம்சங்கள் டுகாட்டி பைக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை நிற்கும் என்பதுடன் வழக்கமாக இடம்பெறும். ஆனால், தற்போது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பம்தான் இந்த பைக்கின் முத்தாய்ப்பான விஷயமாக இருக்கிறது. அதேபோன்று, ஓட்டுனருக்கு கண்ணுக்கு புலப்படாத வகையில் சாலையில் குறுக்கே வரும் பாதசாரிகள், வாகனங்கள் குறித்த எச்சரிக்கை வசதியுடன் இந்த அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் இயங்கும்.

இந்த பைக்கில் முன்புறத்தில் 50 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் தொழில்நுட்பமும் இதன் முக்கிய சிறப்பாக இருக்கிறது. இதன் இருக்கை உயரத்தை 840 மிமீ முதல் 860 மிமீ வரை ஓட்டுபவரின் உயரத்திற்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்துகொள்ளலாம்.

முன்சக்கரத்தில் பிரெம்போ மோனோ பிளாக் 4 பிஸ்டன் காலிபர்கள் கொண்ட இரண்டு 320மிமீ செமி ஃப்ளோட்டிங் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் பிரெம்போ 2 பிஸ்டன் ஃப்ளோட்டிங் காலிபர் கொண்ட 265 மிமீ டிஸ்க் பிரேக் சிஸ்டமும் உள்ளன. முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 17 அங்குல சக்கரமும் Hள்ளன. பைரெல்லி ஸ்கார்ப்பியான் ட்ரெயில் 2 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல் இல்லை. எனினும், அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் இந்தியா கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பு இந்திய அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் பிரியர்கள் மத்தியில் உள்ளது.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக