Whatsapp வீடு, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், இதனால் சில தேவையற்ற சிக்கல்களும் வருகின்றன.
பல முறை நாம் ஆன்லைன் செல்ல விரும்பாமல் வேறு யாரோ ஒருவரின் ஸ்டேட்டஸ், அதாவது அவர் ஆன்லைனில் உள்ளாரா இல்லையா என தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.
இதுபோன்ற சூழ்நிலையில், Whatsapp-ஐத் திறக்காமலேயே மற்றவர்களின் ஆன்லைன் நிலைகளை நீங்கள் சரிபார்க்க உதவும் ஒரு ட்ரிக்கை பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்.
இருப்பினும், Whatsapp-ஐ நீங்கள் திறக்காமல் மற்றவருடைய ஸ்டேட்சை தெரிந்துகொள்ளும் எந்த அம்சத்தையும் Whatsapp வழங்கவில்லை. ஆனால், சில தர்ட் பார்டி செயலிகளால், இந்த வேலையை எளிதாக செய்யலாம்.
GBWhatsApp உதவியாக இருக்கும்
Whatsapp-ஐத் திறக்காமல் மற்றவர்கள் ஆன்லைனில் (Online) இருக்கிறார்களா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், இதற்கு நீங்கள் GBWhatsApp ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் ஆப் ஸ்டோருக்குச் சென்று GBWhatsApp ஐத் தேடுங்கள். பின்னர் அதை பதிவிறக்கவும். இது மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட ஒரு செயலியாகும்.
செயல்படுத்தும் வழி
-முதலில் நீங்கள் App-ஐ ஓப்பன் செய்து, setting-கிற்குள் செல்ல வேண்டும்
-இப்போது இங்கே Chat Screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
-இப்போது இந்த பிரிவில் நீங்கள் ‘Contact Online Toast’-ல் tap செய்ய வேண்டும்
-இங்கே ‘Show contact online toast’-ஐ தேர்ந்தெடுத்து, யாருடைய ஆக்டிவ் ஸ்டேடசை நீங்கள் காண வேண்டுமோ அந்த நபரின் பெயரை செலக்ட் செய்ய வேண்டும்.
இந்த செயல்முறையை நீங்கள் முடித்ததும், செயலியை க்ளோஸ் செய்ய வேண்டும். இனி, நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் Whatsapp-ல் ஆன்லைனில் வரும்போதெல்லாம், உங்களுக்கு நோடிஃபிகேஷன் வந்து விடும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக