எவோக் அர்பன் கிளாசிக் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள் இந்தியாவில் இருந்து வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான எவோக்கின் முதல் எலக்ட்ரிக் பைக் அறிமுகத்திற்கு முன்னதாக இந்தியாவில் வந்து தரையிறங்கியுள்ளது. அர்பன் கிளாசிக் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் முதல் யூனிட் வந்திறங்கியதால், எவோக் மோட்டார்சைக்கிளின் ஷோரூம் இந்தியாவில் அமையலாம்.
அல்லது தனியார் கண்காட்சிக்காக வரவழைக்கப்பட்டிருக்கலாம். இதுதொடர்பாக இணையத்தில் கசிந்துள்ள அதே படங்களை தான் டெஸ்லா க்ளப் இந்தியா நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. எவோக், சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் பிராண்ட் ஆகும்.
இந்தியா உள்பட மற்ற ஆசிய நாடுகளில் கால்பதிக்க தொடர்ந்து முனைப்பு காட்டிவரும் எவோக், தற்சமயம் அர்பன் கிளாசிக் பவர் க்ரூஸர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி, எவோக் அர்பன் எஸ், க்ரூஸரின் நாக்டு வெர்சனையும் சர்வதேச சந்தையில் விற்பனை செய்துவருகிறது.
மற்றப்படி இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய எந்த விபரமும் இந்த படங்களில் இணைக்கப்படவில்லை. தரையில் இருந்து 760மிமீ உயரத்தில் இருக்கையை கொண்டுள்ள இந்த எவோக் பைக்கின் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 130மிமீ ஆக உள்ளது. பைக்கின் கெர்ப் எடை 179 கிலோ ஆகும்.
பைக்கில் ஏபிஎஸ் எதுவும் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அதன் பணியினை கவனிக்க சிபிஎஸ் வழங்கப்படுகிறது. எல்சிடி தரத்தில் தொடுத்திரை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்படும் அர்பன் கிளாசிக் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ப்ரோ, சிட்டி மற்றும் ஈக்கோ என்ற ரைடிங் மோட்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்த படங்களில் பைக் கிளாசிக் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. பைக்கில் 19 கிலோவாட்ஸ் ஹப் மோட்டார் 8.42 கிலோவாட்ஸ்.நேரம் லித்தியம்-இரும்பு என்எம்சி பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக 26 பிஎஸ் மற்றும் 117 என்எம் டார்க் திறனை பெற முடியும்.
0-வில் இருந்து 60kmph என்ற வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச வேகம் 130kmph ஆகும். இதன் பேட்டரியின் சிங்கிள்-சார்ஜில் அதிகப்பட்சமாக 200கிமீ வரையில் பயணிக்க முடியும். 3.6 கிலோவாட்ஸ் சார்ஜர் மூலமாக 0-வில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 90 நிமிடங்களில் நிரப்பிவிடலாம்.
‘ப்ரோஜெக்ட் எம்1' என்ற பெயரில் எவோக் பிராண்டில் இருந்து புதிய ஆரம்ப-நிலை பைக் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எவோக் அர்பன் கிளாசிக் பைக்கின் விலை 8,499 அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.6.33 லட்சமாகும்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக