வங்கி பணி நேரங்கள் அல்லாத பிற சமயங்களில் ஏடிஎம் மெஷின்கள் மூலம் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து பார்க்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஐசிஐசிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புப்படி வங்கியின் அலுவல் சமயம் தவிர பிற நேரங்களில் ஏடிஎம் மெஷின் மூலம் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வேலைநாட்களில் மாலை 6 மணி முதல் காலை 8 மணி முதல் வரை ஏடிஎம் மிஷன் மூலம் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும்.
விடுமுறை நாட்களில் கட்டணம்
வங்கியின் விடுமுறை நாட்களில் ஏடிஎம் டெபாசிட் இயந்திரம் மூலமாக பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் விதிக்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.50 கட்டணமாக விதிக்கப்படும்.
நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் அறிவிப்பு
ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ள இந்த புதிய நடைமுறை நவம்பர் 1 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது. அதேநேரத்தில் ஒரு ரூ.10,000 மேல் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் விதிக்கப்படும் என வங்கி அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ள அறிவிப்பு
ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ள இந்த அறிவிப்பு மூத்த குடிமக்கள், அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு, ஜன்தன் வங்கி கணக்கு, மாணவர்கள், பார்வையற்றோர் வைத்திருக்கும் வங்கி கணக்கு உள்ளிட்டவைகளுக்கு பொருந்தாது எனவும் வங்கி குறிப்பிட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி அறிவிப்பு
இதேபோல் ஆக்சிஸ் வங்கி ஆகஸ்ட் 1 முதல் கட்டணம் வசூலிக்கும் முறையை தொடங்கியது. ஆக்சிஸ் வங்கி அறிவிப்பின்படி வங்கி நேரத்திற்கு பிறகு மாலை 5 மணி முதல் காலை 9.30 மணிவரை, வங்கி விடுமுறை தினங்களில் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக