மைக்ரோமேக்ஸ் இன் தொடர் ஸ்மார்ட்போன் நாளை (நவம்பர் 3) அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.7000 முதல் ரூ.15,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"இன்" தொடர் ஸ்மார்ட்போன்
மைக்ரோமேக்ஸ் தனது "இன்" தொடர் ஸ்மார்ட்போன்களை நாளை (நவம்பர் 3) அறிமுகம் செய்யும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மைக்ரோமேக்ஸ் தனது புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டு நிகழ்வு யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என அறிவித்துள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வானது நிறுவனத்தின் சமூக பக்கங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
மீடியா டெக் ஹீலியோ ஜி சீரிஸ்
மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் மீடியா டெக் ஹீலியோ ஜி சீரிஸில் இயங்கும் எனவும் இது பெங்களூருவில் உள்ள ஆர்&டி மையத்தில் வடிவமைத்து உருவாக்கியது என கூறப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் இன் தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் எனவும் அவை 1 ஏ மற்றும் 1 இன் தொடராகும். மைக்ரோமேக்ஸ் இன் தொடரில் எதிர்பார்க்கப்படும் விலைகள் மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
மைக்ரோமேக்ஸ் இன் 1ஏ, இன் 1 எதிர்பார்க்கப்படும் விலை
இன் தொடரின் கீழ் வெளியாகும் ஸ்மார்ட்போன் விலை ரூ.7000 முதல் ரூ.15000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி, ரியல்மி உள்ளிட்ட பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுடன் நேரடி போட்டியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்
மைக்ரோமேக்ஸ் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள் டீசர்களில் காண்பிக்கப்படுகின்றன. அவை மீடியா டெக் ஹீலியோ ஜி35 சிப்செட் மற்றும் மீடியா டெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் இடது மூலையில் செவ்வக வடிவ கேமரா அமைப்பு இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் IN 1A மற்றும் IN 1 விவரக்குறிப்புகள்
6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரியோடு, ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் உள்நாட்டு தயாரிப்பாகும். இந்த ஸ்மார்ட்போன் வேரியண்ட்கள் பொருத்தவரை 2 ஜிபி ரேம் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் 32 ஜிபி சேமிப்பு வசதி இரண்டு வகையில் இருக்கும் எனவும் இதில் 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. செல்பி வசதிக்கு முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இருக்கும்.
13 மெகாபிக்சல் கேமரா
3 ஜிபி ரேம் வேரியண்டை பொருத்தவரை இதில் 13 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும் எனவும் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக