இந்தியன் ரயில்வே சாதாரண நாட்களில் தினமும் சுமார் 12600 ரயில்களை இயக்குகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 23 மில்லியன் மக்கள் அதில் பயணம் செய்கிறார்கள். பயணத்தின் போது, ஏராளமான முக்கியமான ஆவணங்கள் அல்லது பயணிகளின் முக்கியமான பொருட்கள் ரயில்களில் விடப்படுகின்றன. இது பயணிகளுக்கு மிகவும் கடினமான சூழலையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த பிரச்சனைக்கான தீர்வை இனி இங்கே காணலாம்.
முக்கியமான ஆவணம் தொலைந்தால் உடனடியாக இந்த வேலையைச் செய்யுங்கள்
பயணத்தின் போது ரயிலில் ஏதேனும் முக்கியமான ஆவணத்தை நீங்கள் தவறவிட்டிருந்தால், பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் ரயில் புறப்பட்டுவிட்டால், உடனடியாக நீங்கள் இருக்கும் நிலையத்தின் deputy SS Commercial-க்கு தகவல் அளிக்கவும். ரயிலில் இருக்கும் TT அல்லது பிற ஊழியர்களுக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டு, உங்கள் இருக்கையிலிருந்து ஆவணம் எடுக்கப்பட்டு, ரயில்வே (Railway) பணியாளர்கள் உங்கள் ஆவணத்தை அடுத்த நிலையத்தில் உள்ள RPF க்கு சமர்ப்பிப்பார்கள். உங்கள் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையைக் காண்பித்து உங்கள் ஆவணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நேர்காணலுக்கு தேவையான ஆவணங்கள்
நீங்கள் தேர்வுக்கோ அல்லது அரசு வேலைக்கான நேர்காணலுக்கோ செல்கிறீர்கள் என்றால், நீங்கள் இருக்கும் நிலையத்தில், உங்கள் ஆவணம் ரயிலில் காணாமல் போனது பற்றியோ அல்லது விடுபட்டது குறித்தோ, RPF காவல் நிலையத்தில் ஒரு FIR தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த எஃப்.ஐ.ஆர் நகலைக் காண்பித்து நீங்கள் தேர்வு அல்லது நேர்காணலில் பங்கேற்க முடியும். பின்னர் நீங்கள் சான்றிதழ்களையும் ஆவணங்களையும் காண்பிக்க அல்லது சமர்ப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ரயிலில் இழந்த சாமான்களை மீண்டும் பெறலாம்
ரயிலில் உங்கள் சாமான்களை நீங்கள் தவறவிட்டிருந்தால், நிலையத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, ஆர்.பி.எஃப் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுங்கள். ரயிலில் உங்கள் இருக்கையில் பொருட்கள் காணப்பட்டால், அது உள்ளூர் ஆர்.பி.எஃப் காவல் நிலையத்தில் டெபாசிட் செய்யப்படும். இது குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும், உங்கள் டிக்கெட் மற்றும் அடையாள அட்டையைக் காண்பித்து உங்கள் பொருட்களை நீங்கள் எடுத்துச் செல்ல முடியும்.
புது தில்லி (New Delhi) ரயில் நிலையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் பயணிகளின் முகவரி மற்றும் அடையாளம் சரிபார்க்கப்பட்ட பின்னர், பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக