கொரோனா வைரஸ் உலகை பாடாய் படுத்தி வருகிறது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில்தான் இன்று உலகமே உள்ளது. பல நாடுகளும் நிறுவனங்களும், COVID-19-க்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதில் பல நிறுவனங்கள் தங்கள் தடுப்பு மருந்துகளின் இறுதி கட்ட பரிசோதனைகளை செய்து கொண்டிருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியாகும்.
இந்நிலையில், 30 விநாடுகளில் கொடிய கொரோனா வைரசைக் (Corona Virus) கொல்லும் பண்புகளை மவுத்வாஷ் வெளிப்படுத்தியுள்ளதாக ஒரு சோதனை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நோயால் பாதிக்கப்பட்டவர்களில் COVID-19-ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸான SARS-CoV-2 இன் வாய்வழி வைரஸ் அளவைக் குறைக்கும் ஆற்றல் மவுத்வாஷ்களுக்கு உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.
மவுத்வாஷ், நோயாளியின் உமிழ்நீரில் உள்ள COVID-19 அளவைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பற்றிய மருத்துவ சோதனைக்கான முதற்கட்ட முடிவு வந்துள்ளது.
கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், செட்டில் பைரிடினியம் குளோரைடின் (சிபிசி) 0.07% மூலப்பொருள் கொண்ட மவுத்வாஷ்கள் COVID-19 ஐக் குறைப்பதற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டியுள்ளன.
சோதனையில் பயன்படுத்தப்படும் ஒரே இங்கிலாந்து மவுத்வாஷ் பிராண்டாக டென்டில் இருக்கும். ஆய்வில் கண்டறியப்படும் மற்ற விவரங்கள் குறித்து 2021 இன் தொடக்கத்தில் வெளியிடப்படும்.
இதற்கிடையில், உலகளவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 1.32 மில்லியனை எட்டியுள்ளது. நேற்று மட்டும் 9,797 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா தொற்று ஒரு புறம் இருக்க, இந்த தொற்றால் ஏற்படும் பக்க விளைவுகளும் (Side Effects) மக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளன. உடலில் பல பாகங்களை இந்த வைரஸ் தாக்குவதோடு, பலருக்கு வாழ்நாள் முழுதும் குணப்படுத்தப்பட முடியாத சில நோய்களையும் இது உடலில் உண்டாக்கி விடுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக