Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 நவம்பர், 2020

ரிஷப ராசியில் குரு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். அசுர குருவான சுக்கிராச்சாரியாரை, தேவகுருவான பிரகஸ்பதி பகையாகவே எண்ணுகின்றார். இதனால் இங்கு பகை என்ற நிலையில் அவர் செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கௌரவமான வாழ்க்கையையும், மற்றவர்கள் கண்டு பயம் கொள்ளக்கூடிய உருவத்தோற்றத்தையும் கொண்டவர்கள். 

🌟 நினைவுத்திறன் அதிகம் உடையவர்கள். எளிதில் எதையும் மறக்கமாட்டார்கள். 

🌟 தனம் சம்பந்தமான செயல்பாடுகளில் நுணுக்கமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 சிக்கனமாக வாழ விரும்புபவர்கள். அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பார்கள்.

🌟 எடுத்த செயலை நிதானமாக செய்து முடிப்பவர்கள். இதனால் சிறிது காலதாமதம் உண்டாகும்.

🌟 ஆன்மீக எண்ணங்களும், வேதங்களின் மீது நம்பிக்கையும் உடையவர்கள்.

🌟 நல்ல தீர்க்கமான ஆயுளை உடையவர்கள்.

🌟 தன்னை பற்றி உயர்வாகவும், பெருமையாகவும் பேசக்கூடியவர்கள்.

🌟 தன்னுடைய செயலை மற்றவர்களை கொண்டு செய்து முடித்து கொள்வார்கள். 

🌟 எதற்காகவும், யாருக்காகவும் கவலைப்பட மாட்டார்கள். 

🌟 இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களுக்கு உபதேசம் செய்து அவர்களை வழி நடத்தும் திறமை உடையவர்கள்.

🌟 குருமார்கள் மீது மிகுந்த அன்பும், பற்றும் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள்.

🌟 எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சாதுர்யமாக சமாளிக்கக்கூடியவர்கள்.

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக