மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது. சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் மராஸ்ஸோ ஆட்டோமேட்டிக் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவின் எம்பிவி கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா மற்றும் இன்னோவா க்ரிஸ்ட்டா இடையிலான தேர்வாக மஹிந்திரா மராஸ்ஸோ நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மாருதி எர்டிகா காரின் இடவசதி போதுமானதாக இல்லை, அதே சமயம் இன்னோவா அளவுக்கு பட்ஜெட் இல்லை என்பவர்களுக்கு சிறந்த மாற்று தேர்வாக மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளது.
எனினும், இந்த கார் டீசல் எஞ்சின் தேர்வில் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைத்து வருகிறது. இதில், ஆட்டோமேட்டிக் மாடல் இல்லாதது வாடிக்கையாளர்களால் குறையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த குறையை போக்கும் விதத்தில், மராஸ்ஸோ காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை
விரைவில் மஹிந்திரா வழங்க உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், மஹிந்திரா
மராஸ்ஸோ காரின் ஆட்டோமேட்டிக் மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு
இருக்கிறது. இதன் படங்கள் டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளிவந்துள்ளது. ஸ்பை படத்தில்
ஆட்டோஷிஃப்ட் பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்
தேர்வு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, புதிய 1.5 லிட்டர்
டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் மஹிந்திரா மராஸ்ஸோ கார் வர இருக்கிறது. இதனுடன்
ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
அதேநேரத்தில், அஸின் நிறுவனத்திடம் இருந்து ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை சப்ளை
பெற்று மராஸ்ஸோ காரில் வழங்குவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் வட்டாரத்
தகவல்கள் கூறுகின்றன. இப்போதைக்கு இதுகுறித்த உறுதியானத் தகவல் இல்லை.
மஹிந்திரா மராஸ்ஸோ காரில் எதிர்பார்க்கப்படும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் 161
பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த
எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது மஹிந்திரா மராஸ்ஸோ காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்
பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 300 என்எம்
டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல்
கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளதும்,
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக