பழைய ஸ்கூட்டரோ அல்லது பைக்கோ எதுவாக இருந்தாலும் நாங்க வாங்கிக் கொள்கிறோம் என பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ எலெக்ட்ரிக் இருக்கின்றது. இந்த நிறுவனமே பழைய ஸ்கூட்டரோ, பைக்கோ எதுவாக இருந்தாலும் நாங்கள் வாங்கிக் கொள்கின்றோம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அதன் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தைப் பற்றி அறிவித்துள்ளது.
தன்னுடைய மின்சார இருசக்கர வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்கும் நோக்கில் இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை ஹீரோ எலெக்ட்ரிக் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக கிரெட்ஆர் எனும் நிறுவனத்துடன் ஹீரோ எலெக்ட்ரிக் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இவ்விருவரும் இணைந்தே பெட்ரோலால் இயங்கும் பழைய இருசக்கர வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்ய இருக்கின்றனர்.
ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் ஹீரோ ஸ்பிளெண்டர் என அனைத்து விதமான இருசக்கர வாகனங்களை இவர்கள் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் ஏற்றுக்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு, ஏற்றுக் கொள்ளப்படும் இருசக்கர வாகனங்கள் கிரெட்ஆர் நிறுவனமே தர மதிப்பீடு செய்யும்.
இத கணக்கீடு செய்யும் தொகையை வைத்தே புதிய மின்சார இருசக்கர வாகனத்தின்மீதான விலை குறைப்புச் செய்யப்பட இருக்கின்றது. இந்த அனைத்து வேலைகளும் முடிவடைந்த பின்னரே புதிய ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார இருசக்கர வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தை இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே ஹீரோ எலெக்ட்ரிக் தொடங்கியிருக்கின்றது. டெல்லி, ஜெய்பூர், ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டுமே தற்போது முன்னோட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கின்றது.
கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பலர் தனி வாகனத்தில் பயணிப்பதையே பாதுகாப்பானது என உணர்ந்திருக்கின்றனர். இதனால் புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கைக் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக புதிய மின்சார இருசக்கர வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் முடிவு செய்துள்ளது.
எக்ஸ்சேஞ்ச் மற்றும் இரு நிறுவனங்களின் இணைவுகுறித்து கிரெட்ஆர் நிறுவனத்தின் தலைமை மூலோபாய அதிகாரி சசிதர் நந்திகம் கூறியதாவது, "இந்தியாவில் மின்சார இயக்கம் வியத்தகு முறையில் மாறப்போகின்றது. எனவே வாடிக்கையாளர்களுக்கு சுலபமான நுகர்தலை வழங்கும் விதமாக இந்த இணைவு மற்றும் எக்ஸ்சேஞ்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அண்மையில்தான் சிட்டி ஸ்பீடு எனும் செக்மெண்டில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியது. ஃபோட்டான்-என்எச், ஆப்டிமா எச்எக்ஸ் மற்றும் என்ஒய்எக்ஸ்-எச்எக்ஸ் ஆகியவற்றை அது அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர்கள் அதிகபட்சம் ஓர் முழுமையான சார்ஜில் 80 கிமீ ரேஞ்ஜை வழங்கக்கூடியதாகும். இதுதவிர இன்னும் பல சிறப்பு விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக