ஜனவரி 2021 முதல் இந்தியாவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்றுமுதல் அதாவது Turnover கொண்ட நிறுவனங்கள் அனைத்தும், நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தகத்திற்குக் கண்டிப்பாக ஈ-பில் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது மட்டுமல்லாமல் அமலாக்கமும் செய்துள்ளது.
தற்போது மத்திய அரசின் விதிமுறைகள் படி 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்களுக்குத் தான் கண்டிப்பாக ஈ-பில் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை விதித்திருந்தது. இந்த விதிமுறை கடந்த அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டில் உள்ளது.
மேலும் ஈ-பில் கொடுக்காத நிறுவனங்கள் மீது கடந்த ஒருமாதமாக அபராதம் விதித்து வரும் நிலையில், 500 கோடி ரூபாய் அளவீட்டை 100 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய விதிமுறைகளின் படி வருடத்திற்கு 100 கோடி ரூபாய்க்கும், அதற்கு அதிகமாக விற்றுமுதல் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் ஈபில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 50 நாட்களுக்குள் இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்கள் ஈபில் கொடுக்கத் தயாராக வேண்டும். இல்லையெனில் அபராதம் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
இதன் படி 100 கோடி ரூபாய்க்கும், அதற்கு அதிகமாக விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் அரசின் unique invoice reference தளத்தில் ஈபில் உருவாக்குவது மட்டும் அல்லாமல் IRN (invoice reference number) கட்டாயம் உருவாக்க வேண்டும்.
இதைச் செய்யாவிட்டால் சரக்குகள் ஒரு டெலிவரி செய்ய முடியாது. இதனால் நிறுவனங்கள் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியது மட்டும் இல்லாமல் அபராதமும் பெற வேண்டிய நிலை உருவாகும்.
மேலும் இந்த முறையை மத்திய அரசு வருகிற 2021 ஏப்ரல் மாதம் முதல் அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்க ஆலோசனை செய்து வருவதாக நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த முறை மூலம் ஜிஎஸ்டி வரி வசூலில் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அரசை ஏமாற்றும் நிறுவனங்கள் கட்டாயம் அரசு கைகளில் சிக்கும் என மத்திய அரசு நம்புகிறது.
மத்திய அரசின் தரவுகள் படி இந்தியாவில் சுமார் 7500 ஜிஎஸ்டி எண்கள் வருடத்திற்கு 500 கோடி ரூபாய் அளவிலான விற்றுமுதல் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக