சீனாவின் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமான பைட்டான்ஸ் குழுமத்தின் டிக்டாக் செயலி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டில் இருந்து முழுமையாகத் தடை செய்யப்பட்டது.
இந்திய சீனா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையில் நடந்த தாக்குதலின் எதிரொலியாகவும், இந்திய மக்களின் தகவல் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் காரணமாக டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டது.
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு, மீண்டும் சேவையைத் தொடர கூட்டணி அமைக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில். இந்தியாவில் மீண்டும் சேவையைத் துவங்குவதற்கான பணிகளை டிக்டாக் செய்யத் துவங்கியுள்ளது.
புதிய ஆட்சி
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் டிக்டாக் மீது அறிவித்த தடை உத்தரவுகள் நீங்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாக டிக்டாக்-ன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நம்புகிறது.
கூட்டணி
ஏற்கனவே டிக்டாக் சீனா வர்த்தகத்தில் இருந்து தனியாகப் பிரிந்து பிற நாட்டு நிறுவனங்களுக்கெனப் பிரத்தியேக நிறுவனத்தைத் துவங்கி அந்த நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வால்மார்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயாராக உள்ளது.
இந்தியா
இந்நிலையில் பைட்டான்ஸ்-ன் டிக்டாக் மற்றும் ஹலோ ஆகிய செயலிகள் மூலம் இந்தியாவில் பல கோடி வாடிக்கையாளர்களைப் பெற்று இந்நிறுவனத்தின் முக்கியச் சந்தையாக மாற்றியுள்ளது. இதனால் இந்தியச் சந்தையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க முடியாது என முடிவு செய்துள்ள டிக்டாக் மீண்டும் இந்தியாவிற்கும் வரும் பணிகளைச் செய்து வருகிறது.
டிக்டாக்
அமெரிக்காவில் சாதகமான சூழ்நிலை உருவாக்கியுள்ள நிலையில் டிக்டாக் இந்தியாவிற்குத் திரும்ப வர வேண்டும் என்ற திட்டத்துடன் சட்டம், கொள்கை மற்றும் சட்ட ஆலோசனை, தகவல்தொடர்புகள் பணிகளுக்காகப் பல முக்கியக் கூட்டணிகளைத் தேர்வு செய்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்திய சட்டம்
இந்தியாவிற்குத் திரும்ப வருவதற்கான முயற்சிகளில் டிக்டாக் ஈடுபடுவது குறித்து எவ்விதமான பதிலையும், விளக்கத்தையும் டிக்டாக் அளிக்கவில்லை. ஆனால் சேவை அனைத்தும் இந்தியச் சட்டத்தின் கீழ் பொருந்தக்கூடியதாக மட்டுமே இருக்கும் என்றும் தகவல் பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி ஆகியவற்றை நிலைநாட்டும் அளவிற்கு அனைத்து விதிகளையும் கிடைப்பிடிக்க உறுதியாக உள்ளதாகவும் டிக்டாக் தெரிவித்துள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக