இது
போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள்
போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம்
சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கொரோனா இடர்பாடுகளுக்கு இடையிலும் பைக் விற்பனையில் மிகச் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது ஜாவா நிறுவனம்.
நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் ஜாவா பைக்குகள் மிகச் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்களுக்கு நேர் போட்டியாகவும், பாரம்பரியம் மிக்க சிறந்த தேர்வாகவும் ஜாவா பைக்குகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், ஜாவா நிறுவனம் பைக் விற்பனையில் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. ஆம். விற்பனை துவங்கப்பட்டு ஓர் ஆண்டு காலத்தில் 50,000 பைக்குகளை விற்பனை செய்து புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது.
கொரோனா காலத்தின்போது உற்பத்தி மற்றும் விற்பனை முற்றிலும் முடங்கிய போதிலும் இந்த சிறப்பான எண்ணிக்கையை பெற்றிருப்பதாக ஜாவா நிறுவனத்தை கையாண்டு வரும் க்ளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
ஜாவா பைக்குகளுக்கு தொடர்ந்து சிறப்பான டிமான்ட் இருந்து வருவதால், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும், டீலர்கள் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக க்ளாசிக் லெஜென்ட்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து க்ளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அசோக் சிங் ஜோஷி கூறுகையில்,"இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் புதிய நிறுவனமாக கால் பதித்தாலும், மிக குறுகிய காலத்தில் இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கையை தொட்டு சாதனை படைத்துள்ளோம். தற்போது விற்பனையில் உள்ள மூன்று மாடல்களின் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
வாடிக்கையாளர்களின் தேவையை மனதில் கொண்டு டீலர்கள் மற்றும் சர்வீஸ் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார். கொரோனாவால் விற்பனையில் முதல் 50,000 எண்ணிக்கையை தொடுவதற்கு சற்று கூடுதல் காலம் தேவைப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த 50,000 விற்பனை எண்ணிக்கையை மிக விரைவாக தொடுவோம்," என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டில் தற்போது ஜாவா 300, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் என மூன்று வகையான மோட்டார்சைக்கிள் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், பெராக் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் முதன்முதலாக ஆலையிலேயே உற்பத்தி செய்யப்படும் பாபர் வகை மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக