அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆன ரியல்மி வாட்ச் எஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய வாட்ச் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ரியல்மி வாட்ச் எஸ்-இன் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.7000-க்கு அறிமுகமாகி உள்ளது.
இந்த புதிய சாதனம் ஆரஞ்சு, நீலம் மற்றும் பச்சை நிற ஸ்ட்ராப் வண்ண விருப்பங்களுடன் சிங்கிள் பிளாக் சர்குலர் டயலில் வருகிறது. இந்த புதிய சாதனத்தின் விளைவாக, ரியல்மி வாட்ச் எஸ் அதன் ப்ரோ வேரியண்ட்டுடன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரியல்மி வாட்ச் எஸ் சாதனம் ஆனது 1.3-இன் ஆட்டோ ப்ரைட்னஸ் டச் ஸ்க்ரீன்-ஐ 360
x 360 ரெசல்யூஷன் மற்றும் 278 பிபிஐ உடன் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.
குறிப்பாக இந்த ரியல்மி வாட்ச் எஸ் சாதனம் 600 நைட்ஸ் ப்ரைட்நஸ், 5-லெவல் ஆட்டோ
ப்ரைட்நஸ் கட்டுப்பாடு மற்றும் 100 + தனித்துவமான வாட்ச் பேஸ்கள் போன்ற
கவனிக்கத்தக்க அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டர் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனம் இரத்த ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்கும் ஒரு SpO2 சென்சாருடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் ரியல்மி லின்க் ஆப் வழியாக ஸ்மார்ட்போன் உடன் இணையும். இது ஆண்ட்ராய்டு 5.0-க்கு மேலான ஓஎஸ் கொண்ட ப்ளூடூத் 5.0 ஆதரவுடன் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் வாட்சில் Strength Training, Football, Basketball, Pingpong, Badminton, Indoor Cycle, Elliptical, Yoga, Rowing Machine, Outdoor Run, Walk, Indoor Run, Outdoor Cycle, Aerobic உள்ளிட்ட 16 கேம் மோட்கள் உள்ளன. முன்பு குறிப்பிட்டபடி இவைகளை ரியல்மி லின்க் ஆப்புடன் இணைத்து கண்காணிக்கலாம்.
இந்த ரியல்மி வாட்ச் எஸ் ஆனது 390 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. பின்பு இதன் சிங்கிள் 100% சார்ஜ் ஆனது 15 நாட்கள் வரை நீடிக்கும் என்று ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது. இந்த சாதனம் முழுமையாக சார்ஜ் ஆக சுமார் 2 மணி நேரம் ஆகும்.
இந்த சாதனத்தை சார்ஜ் செய்யும் நோக்கத்திற்காக ரியல்மி நிறுவனம் ஒரு மேக்னட் சார்ஜரையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஐபி 68 சான்றிதழை பெற்றுள்ளது. இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பை உறுதி செய்கிறது.
மேலும் ம்யூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், பைண்ட் மை போன், மெடிடேஷன், 12/24-மணிநேரம், ஸ்டாப்வாட்ச், கக்ளாக், வானிலை முன்னறிவிப்பு, டேட் டிஸ்பிளே, டயல், கிளவுட் மல்டி-டயல், தகஸ்டம் டயல், ஓடிஏ அப்டேட், மல்டி-லாங்குவேஜ் இன்டர்பேஸ், மல்டி லேங்குவேஜ், டேட்டா சேவிங், ஆல்-டே டேட்டா, கால் நோட்டிபிகேஷன், செமெஸேஜ் ரிமைண்டர், அலாரம் ரிமைண்டர், ஸ்டெப்ஸ் கோல் கம்ப்ளீஷன் ரிமைண்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது ரியல்மி வாட்ச் எஸ்.
இந்த சாதனம் 100,000 முறை பட்டன் டெஸ்ட் மற்றும் 3000 வியர் டெஸ்ட், 3000 முறை பெண்ட் டெஸ்ட், மற்றும் 7 கிலோ டென்ஷன் ரெசிஸ்டென்ஸ் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில் சோதனைகளை மேற்கொண்டதாக ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக