காதல் திருமணத்திற்கு அபராதம் விதித்த 2 பஞ்சாயித்து தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா அருகே ஜீவானந்தம், பவானி இளம் ஜோடிகள் காதல் திருமண செய்துள்ளனர்.
காதல் திருமணம் செய்துகொண்டு பிரச்சனை பஞ்சாயத்து வர, அதை விசாரித்த ஊர் பள்ளிப்பட்டு என்ற ஊரின் பஞ்சாயத்துத் தலைவர்கள் செல்வராஜ் மற்றும் கமல் கண்ணன் ஆகியோர் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.
மேலும் இந்த விவகாரம் பஞ்சாயத்தில் தீராமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இதை விசாரித்த காவல் துறையினர் அபராதம் விதித்த இரண்டு பஞ்சாயத்துத் தலைவர்களையும் கைது செய்துள்ளனர்.
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக